வாக்குறுதியை நிறைவேற்றாத தி.மு.க.,வை வீட்டுக்கு அனுப்புங்கள்; பா.ம.க., வேட்பாளர் ஆவேசம்
விக்கிரவாண்டி: தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத தி.மு.க.,வை வீட்டுக்கு அனுப்புங்கள் என பா.ம.க., வேட்பாளர் சிவக்குமார் பேசினார்.
விக்கிரவாண்டி தொகுதி பிடாரிப்பட்டு, திருநந்திபுரம் எண்ணாயிரம் ,எசாலம் உட்பட பல்வேறு கிராமங்களில் நடந்த பிரசாரத்தில் அவர் பேசுகையில், 'இந்த தேர்தலில் இத்தேர்தலில் முதல்வராக பழனிசாமி பொறுப்பேற்ற பிறகு தேர்தல் வாக்குறுதி அனைத்தையும் நிறைவேற்றுவார்.
கடந்த 5 ஆண்டு காலமாக ஆட்சி செய்த தி.மு.க., மக்களுக்கு கொடுத்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. வாக்குறுதியை நிறைவேற்றாத தி.மு.க.,வை வீட்டிற்கு அனுப்புங்கள்
தமிழகத்தில் போதைப் பொருட்களின் புழக்கம், டாஸ்மாக் விற்பனை அதிகரித்துள்ளதோடு, கடன் சுமையை தான் மக்கள் தலையில் சுமத்தியுள்ளனர்' என்றார்.
தொகுதி பொறுப்பாளர் ஆலயமணி, மாவட்ட தலைவர் புகழேந்தி, மாநில அமைப்பு துணைச் செயலாளர் பழனிவேல், சுபாஷ் சந்திர போஸ், ஒன்றிய செயலாளர்கள் கோபாலகிருஷ்ணன் செல்வகுமார், சுரேஷ், கலையரசன், அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் பன்னீர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
மேலும்
-
ராகுலுக்கு சரத் பவார் அட்வைஸ்!
-
வழக்கு விசாரணைக்கு ஏ.ஐ.,: குஜராத் போலீஸ் அறிமுகம்
-
தார்வாட் மாவட்ட இளைஞர் காங்., பொதுச்செயலர் வெட்டிக்கொலை
-
பாக்.,கில் ஈரான் அதிகாரி - அமெரிக்க துணை அதிபர் அமைதி பேச்சு
-
லடாக் மக்களின் ஆதாரில் ஜம்மு - காஷ்மீர் நீக்கம்
-
சுதந்திர நகர் திரவுபதி அம்மன் கோவிலில் இன்று கரகம், தீமிதி விழா கோலாகலம்