உள்நாட்டில் உருவான பிரம்மோஸ் ஏவுகணை ராணுவத்திடம் முறைப்படி ஒப்படைப்பு
லக்னோ: உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணையின் முதல் தொகுதி நம் ராணுவத்திடம் நேற்று முறைப்படி ஒப்படைக்கப்பட்டது. 'தற்சார்பு இந்தியா' திட்டத்திற்கு இந்நிகழ்வு உத்வேகம் அளித்துள்ளது.
ராணுவ தளவாடங்களுக்கு வெளிநாடுகளை நம்பி இருக்கும் நிலையை மாற்றும் வகையில், உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் ராணுவ தளவாட உற்பத்தி ஆலை அமைக்கப்பட்டது.
வேலைவாய்ப்பு
இந்தியா - ரஷ்யா கூட்டு முயற்சியில், இந்த உற்பத்தி ஆலையில் இருந்து பிரம்மோஸ் ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம், வெளிநாட்டு இறக்குமதி குறைவதுடன், நம் நாட்டின் பொருளாதாரம் உயர்வதற்கும் வழி ஏற்பட்டுள்ளது.
தவிர, 'மேக் இன் இந்தியா' திட்டத்திற்கும் இந்த ஆலை வலுசேர்த்துள்ளது. இதனால், உள்ளூர் தொழிற்சாலைகளும் பயனடைவதால், நுாற்றுக்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பும் கிடைத்து வருகிறது.
உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுவதால், நம் தேவையை கடந்து, வெளிநாடுகளுக்கும் ஏவுகணைகளை ஏற்றுமதி செய்ய முடியும்.
மும்மடங்கு வேகம்
ஏற்கனவே பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகள் நம்மிடம் ஏவுகணைகள் வாங்க ஒப்பந்தம் செய்துள்ளன. நம் ராணுவத்துக்கு வலுசேர்த்துள்ள பிரம்மோஸ் ஏவுகணையை நிலம், நீர் மற்றும் வான் பகுதி என மூன்று தளங்களில் இருந்தும் ஏவ முடியும். ஒலியை விட மூன்று மடங்கு வேகமாக செல்லும் திறன் படைத்தது.
ஒரே சமயத்தில் பல இலக்குகளை தாக்கும் வல் லமை உடையது. இத்தகைய திறன் வாய்ந்த பிரம்மோஸ் ஏவுகணை லக்னோ ஆலையில் தயாரிக்கப்பட்டு வந்த நிலையில், அதன் முதல் தொகுதி நம் ராணுவம் வசம் முறைப்படி நேற்று ஒப்படைக்கப்பட்டது.
ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்நிகழ்வில் பங்கேற்று பிரம்மோஸ் ஏவுகணைகளை ஒப்படைத்தார்.
@block_B@
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மீது கடந்த ஆண்டு, 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது முக்கிய தாக்குதல்களுக்கு பிரம்மோஸ் ஏவுகணையை தான் நம் ராணுவம் அதிகம் பயன்படுத்தியது. குறிப்பாக சுகோய் ரக விமானங்களில் இருந்து ஏவப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணைகள், எதிரிகளை திணறடித்தது பயங்கரவாத முகாம்கள் மற்றும் பாகிஸ்தானின் முக்கிய விமானப்படை தளங்கள் தரைமட்டமாக்கப்பட்டன.block_B
மேலும்
-
ஹார்முஸ் ஜலசந்தியை எப்படி பாதுகாக்கலாம்; 30 நாடுகள் ஆலோசனை
-
ரூ.55,000 கோடி இழந்த அதிபர் டிரம்ப் நிறுவனம்; தலைமை நிர்வாக அதிகாரி அதிரடி மாற்றம்
-
மத்திய அரசு நகர்ப்புற கட்டமைப்பு நிதி; மதுரை, கோவைக்கு கிடைக்க வாய்ப்பு
-
நீங்க என்ன நினைக்கிறீங்க?
-
சந்தை விலை நிலவரம்:கச்சா எண்ணெய்/ ரூபாய் மதிப்பு
-
சந்தை விலை நிலவரம்