உதயநிதி சொத்து விவரம்: வருமான வரித்துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
சென்னை; துணை முதல்வர் உதயநிதி வேட்புமனுவில் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள சொத்து விவரம் குறித்து விசாரணை நடத்த கோரிய வழக்கில், வருமான வரித்துறை அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடும் உதயநிதியின் வேட்பு மனுவில் உள்ள சொத்து விவரங்களில் முரண்பாடுகள் உள்ளன. 2021ம் ஆண்டில் தாக்கல் செய்த வேட்பு மனுவில், 'ரெட் ஜெயண்ட் மூவிஸ்' நிறுவனத்தில் ரூ.7.36 கோடி முதலீடு செய்திருந்ததாக குறிப்பிட்டிருந்தார்.
10 கோடி ரூபாய்
இந்த தேர்தலில், அது தொடர்பான எந்த தகவலையும் அவர் தெரிவிக்கவில்லை. அவரது மனைவி, 'ரெட் ஜெயண்ட் மூவிஸ்' நிறுவனத்தில், ரூ.2.63 கோடி முதலீடு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இந்த பரிவர்த்தனை குறித்து முறையான விளக்கங்கள் எதுவும் வேட்பு மனுவில் இல்லை. 2021ம் ஆண்டு 11.6 கோடி 'ஸ்னோ ஹவுசிங்' நிறுவனத்துக்கு கடன் கொடுத்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார். தற்போதைய வேட்பு மனுவில், 10 கோடி ரூபாய் என்று குறிப்பிட்டுள்ளார்.
சட்ட விரோதமானது
மீதமுள்ள 1.6 கோடி பணம் திருப்பி செலுத்தப்பட்டதா என்ற விவரங்கள் இல்லை. 2020ம் ஆண்டுக்கு முன், 2.02 கோடி வருமானம் இருந்ததாக உதயநிதி கூறியிருந்தார். தற்போது, 10.98 கோடி வருமானம் உள்ளதாக கூறியுள்ளார். இதில் வருமானம் மற்றும் சொத்து அதிகரித்தது குறித்து, உரிய விளக்கங்கள் இல்லை. சொத்து குறித்து தவறான மற்றும் முழுமையற்ற தகவல்களை வேட்பாளர்கள் தெரிவிப்பது, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திற்கு விரோதமானது.
விசாரணை
எனவே, இந்த முரண்பாடுகள் குறித்து விசாரணை நடத்த வருமான வரித்துறை, பெரு நிறுவன விவகாரங்கள் துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட வேண்டும் என குமாரவேல் தனது மனுவில் கூறிருந்தார். இந்த மனு, ஐகோர்ட் தலைமை நீதிபதி தர்மாதிகாரி, நீதிபதி அருள்முருகன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில், வருமான வரி துறை அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஏப்ரல் 20ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
எப்படியும் உச்சநீதிமன்றம் இருக்கின்றது ,தடை பெற .
இதேமாதிரி எல்லா காட்சிகளிலும் மந்திரி பதவி வகித்தவர்களுடைய முதல் தேர்தலில் சமர்ப்பித்த சொத்துவிவரங்களையும் தர்போத்துள்ள சொத்துவிவரங்களையும் சரிபார்க்க வழிசெய்தால் தமிழன்னாட்டினுடைய கடன் தொகை முழுவதையும் அடைக்கும் அளவுக்கு ஊழல்பணம் தேறும் .சீமானைத்தவிர வேறு யாரும் செய்ய வழியும் துணிவும் இல்லை .
வருமான வரித்துறை அறிக்கை உடனே தாக்கல் செய்யுமா அல்லது தேர்தல் நடந்து முடிந்த பிறகு செய்யுமா. வருமான வரித்துறையையும் விலை பேசக் கூடும் அல்லவா..?
சொத்து விவரத்தில் சேர்க்க வேண்டிய சில பூஜ்யங்களை முட்டைகளை பொரித்து சாப்பிட்டு விட்டதால் அது கணக்கில் வராது நீதி அரசர் அவர்களே என்று வாதாட வாய்ப்பு உள்ளது.
வருமான வரி துறை அறிக்கைக்கு முன் உதயநிதி தன் தரப்பு எதிர் விவரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் போது கூடுதல் விவரம் கிடைக்கும். ஏன் வருமான வரி துறை மட்டும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்? பண பரிவர்த்தனை விவரம் மறைக்கிறார் என்றால் பணம் யார் என்ன நோக்கத்தில் கொடுத்து இருக்கிறார்கள் என்ற விவரம் புலனாய்வு மூலம் அறிய முடியும்.
தேர்தல் பிரமாண பத்திரத்தில் சொத்து விபரம் உண்மையாக இருக்கவேண்டுமே தவிர எப்படி வந்தது. எப்படி குறைந்தது எப்படி கடன் அடைபட்டது என்ற விபரங்களை தெரிவிக்க வேண்டியதில்லை.
ஹி ஹி. அந்த உண்மைன்னு சொன்ன பொய்யை பத்திதான் கேக்க போறாங்கோ. வருமான வரித்துறை பதில் அளிக்க வேண்டிய அவசியமில்லை ன்னு ஒரு புது நல வழக்கு தாக்கல் செய்யலாம். வழக்கு புதுசா வரும் இருக்கும். ஒரு தினுசாவும் இருக்கும்.
எல்லா வேட்பாளர்களுக்கும் இது பொருந்த வேண்டும்
உதய நிதி ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பு இந்த ஜேக்கப் விசை திமுகவை எதிர்ப்பது போல நாடகம் ஆடி திமுக எதிர்ப்பு ஓட்டை பிரித்து மீண்டும் தன் முதலாளிகள் உதய் நிதி மற்றும் சபரிசன் கொடுத்த வேளையை செய்கிறான். தேர்தல் முடிந்ததும் கமல் போல காணாமல் போய் விடுவான்...
திமுக ஒரு எக்கு கோட்டை . எங்களை யாரும் தட்டிப்பார்த்தோ இல்லாங்காட்டி சீண்டி பார்க்கவோ முடியாதுன்னு எவனாவது கிளம்பி வருவான் பாருங்களேன். கட்சியில் எல்லோரும் சத்யசீலர்களின் சீடர்கள் என குய்யோ மோரையோ என கூக்குரல் இட பார்ப்பார்கள் ..
எதிர்க்கும் அண்ணாமலை DMK FILES 3 வெளி இடுவார் , போன 2021 அபிடேவிட் இந்த 2026 அபிடேவிட் வித்தியாசம் பார்த்து அதிகம் இருந்தால் ஊழல் என்று கதறுவார் அதே மாதிரி தான் இதுவும்
நீ ஏம்ப்பா கதறுரே? இன்னா விஷயம்?