சூதாட்டத்தை ஊக்குவித்ததாக கர்நாடக அமைச்சர் மீது வழக்கு
பெங்களூரு: கர்நாடக காங்., அரசில், உள்துறை அமைச்சராக இருப்பவர் பரமேஸ்வர். கடந்த மாதம், துமகூரில் கல்லுாரிகளுக்கு இடையிலான கபடி போட்டி நடந்தது. இறுதி போட்டியை காண பரமேஸ்வர் வந்தார்.
போட்டியை பார்த்துக் கொண்டிருந்த அவர், தன் அருகில் அமர்ந்திருந்த கலெக்டர் சுபா கல்யாணிடம், 'விஜயபுரா அணி வெற்றி பெறும்' என கூறி, 500 ரூபாய் பந்தயம் கட்டினார். ஆனால், இறுதியில் தட்சிண கன்னடா அ ணி வெற்றி பெற்றது.
வெற்றி பெற்ற அணிக்கு பரிசு அளிக்கும் போது, கலெக்டரிடம் பந்தயம் கட்டி தோற்றது பற்றி, அமைச்சர் வேடிக்கையாக பேசினார்.
'பணம் வைத்து சூதாடுவதை தடுக்க வேண்டிய உள்துறை அமைச்சரே, சூதாட்டத்தை ஊக்குவித்துள்ளார். அவர் மீது வழக்கு பதிய உத்தரவிட வேண்டும்' என, பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில், சமூக ஆர்வலர் நாகபூஷன் மனு செய்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி சிவகுமார், பரமேஸ்வர் மீது வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்த வேண்டும் என்று, போலீசாருக்கு உத்தரவிட்டார்.