அ.தி.மு.க.,வில் ஓட்டை விழுந்து பல நாட்களாகி விட்டது: ஓ. பன்னீர்செல்வம் பதிலடி
ஆண்டிபட்டி:'அ.தி.மு.க.,வில் ஓட்டை விழுந்து பல நாட்களாகிவிட்டது,' என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்ட தி.மு.க.,வேட்பாளர்களை அறிமுகம் செய்து நாளை (ஏப்ரல் 17) ஆண்டிபட்டியில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம் செய்ய உள்ளார். பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை பார்வையிட முன்னாள் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தி.மு.க.,வினர் அப்பகுதிக்கு வந்திருந்தனர்.
ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:
ஆண்டிபட்டி பிரசாரத்தில் 'நம்மை விட்டு பிரிந்து சென்றவர் எங்கிருந்தாலும் வாழ்க' என்று பழனிச்சாமி கூறியது பற்றி கேட்ட போது, பழனிசாமி என்னைப் பற்றி கூறியது உலகில் உள்ள அதிசயங்களில் ஒன்றாக பார்க்கிறேன். தேனி மாவட்டம் அ.தி.மு.க.,வின் கோட்டை என்பதில் ஓட்டை விழுந்து பல நாட்கள் ஆகிவிட்டது. தேனி மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளிலும் தி.மு.க., பிரமாண்ட வெற்றி பெறும். தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையில் ஆட்சி மீண்டும் மலரும் என்றார்.