அரசு மருத்துவமனையில்  தீ தடுப்பு விழிப்புணர்வு

விருத்தாசலம்: விருத்தாசலம் அரசு பொது மருத்துவமனையில், தீ தடுப்பு விழிப்புணர்வு பயிற்சி நடந்தது.

விருத்தாசலம் தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு பணிகள் நிலையம் சார்பில் தீ தொண்டு வாரத்தை முன்னிட்டு அரசு பொது மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சிக்கு, தலைமை மருத்துவர் சாமிநாதன் தலைமை தாங்கினார்.

தீயணைப்பு நிலைய அலுவலர் சங்கர் தலைமையிலான வீரர்கள், தீ தடுப்பு மற்றும் பேரிடர் காலங்களில் மீட்பு பணிகள் குறித்து செவிலியர்கள், மருத்துவ ஊழியர்களுக்கு செயல்விளக்கப் பயிற்சி தரப்பட்டது.

மேலும், நோயாளிகளின் பார்வையாளர்களுக்கு தீ தடுப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. இதேபோல், தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் பயிற்சி தரப்பட்டது.

Advertisement