ஜிஎஸ்டி நீக்கம் எதிரொலி; ரூ.1 கோடிக்கான மருத்துவக் காப்பீட்டில் மக்கள் ஆர்வம்
சென்னை: மருத்துவக் காப்பீட்டுக்கான ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு முழுவதுமாக நீக்கிய நிலையில், ரூ.1 கோடிக்கான மருத்துவக் காப்பீட்டை எடுக்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மருத்துவ மற்றும் ஆயுள் காப்பீடுகளுக்கு 18 சதவீதமாக இருந்து வந்த ஜிஎஸ்டி வரியை, முற்றிலும் நீக்கம் செய்வதாக, கடந்தாண்டு நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்து வரவேற்பு கிடைத்தது. இதன்மூலம், காப்பீடு பெறும் பாலிசிதாரர்களுக்கு நல்ல பலன் கிடைத்து வருகிறது.
இந்த நிலையில், மருத்துவச் செலவுகள் அதிகரிப்பு மற்றும் பிரீமியம் மீதான ஜிஎஸ்டி வரி நீக்கம் உள்ளிட்ட காரணங்களால் நடப்பாண்டின் முதல் காலாண்டில் காப்பீட்டு நிறுவனங்களின் மூலம் இன்சூரன்ஸ் எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதாவது, கடந்த 2025ன் முதல் காலாண்டை விட 7 முதல் 8 சதவீதம் அதிகரித்துள்ளது.
காப்பீட்டுச் சந்தையில் தற்போது 41% மருத்துவக் காப்பீடுகள் உள்ளன. ஸ்டார் ஹெல்த் இந்நிறுவனத்தில் ரூ.1 கோடி மற்றும் அதற்கு மேல் உள்ள பாலிசிகள் 25-30 சதவீதம் விற்பனையாகின்றன. சில வாடிக்கையாளர்கள் ரூ.5 கோடி முதல் ரூ.10 கோடி வரையிலான காப்பீடு திட்டத்தை தேர்வு செய்ய ஆர்வம் காட்டியுள்ளனர்.
குறிப்பாக, ரூ.50 லட்சம் மற்றும் ரூ.1 கோடி காப்பீட்டு திட்டங்களுக்கு இடையேயான பிரீமியம் தொகை வித்தியாசம் குறைவாக இருப்பதனால், பெரும்பாலானோர் ரூ.1 கோடி காப்பீட்டு திட்டத்தையே தேர்வு செய்கின்றனர்.
தற்போதைய காலகட்டத்தில் மருத்துவ செலவுகள் உச்சம் தொட்டும் வரும் நிலையில், மருத்துவக் காப்பீடு என்பது பொதுமக்களுக்கு நல்ல பயனுள்ளதாக மாறியுள்ளது.
சாப்பாட்டில் உடலுக்கு உவ்வாத ரசாயன கலவை சேர்வதால் வித விதமா நோய் வருகிறது. மக்களே உஷார்! யோகா பண்ணி உடலை திடமா வைத்துக் கொள்ளவும். ஹெல்த் இன்சுரன்ஸ் தண்டம். இது கவர் ஆகாது, அது இப்ப கவர் ஆகாது என குழப்புவார்கள். 45000 ப்ரிமீயம் கட்ட சொல்வார்கள். அந்த பணத்திலே நல்லா போஷாக்கான உணவை சாப்பிட்டா நோயே வராது. கசப்பான பிஃல்ஸ்கு சுண்டைக்காயே தேவலை.