இது உங்கள் இடம்
நாடகம் தயார்!
எஸ்.வரதராஜன், புதுச்சேரியில் இருந்து அனுப்பிய இ - மெயில் கடிதம்: தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் மே 4ல் வெளிவரவுள்ளன.
ஒருவேளை தி.மு.க., வெற்றி பெற்றால், அக்கட்சியும், அதன் கூட்டணி கட்சிகளும் உடனே ஓர் அறிக்கை வெளியிடுவர். அதில்...
l ஓட்டுப்பதிவு நேர்மையாக நடந்தது; ஜனநாயகம் வென்றது
l அதிகார பலம் தோற்று, மக்கள் சக்தி வென்றது
l தி.மு.க.,வின் கடந்த ஐந்தாண்டு கால சாதனைகளுக்கு, மக்கள் கொடுத்த வெகுமதி!
l ஆட்சி அமைத்த பின், தகுதியுள்ள பெண்களுக்கு, 8,000 ரூபாய் கூப்பன் அறிவிக்கப்படும்.
- இப்படி அறிவிப்புகள் வெளியிடுவதுடன், அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளும்,
மத்திய அரசு, ஒன்றிய அரசாக மாறி, 'தமிழகத்தை வஞ்சிக்கிறது; நிதி
அளிக்கவில்லை' என்று ஓட்டை ரிக்கார்டு போல் திரும்பத் திருப்ப கூறுவர்.
இதுவே, அ.தி.மு.க., வெற்றி பெற்றால், 'தி.மு.க., அண்ட் கோ'வினரின் அறிக்கை இப்படி இருக்கும்...
l ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் தில்லு முல்லு செய்து, தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றது
l அடுத்த ஐந்து ஆண்டுகளும், 'பழனிசாமி பதவி விலக வேண்டும்' என்ற கோஷம் ஸ் டாலினிடமிருந்து தொடர்ந்து ஒலிக்கும்
l எங்கோ ஏதாவது ஒரு குழந்தை, அதன் தந்தை செய்த தவறால் உயிரிழந்தால் கூட,
தமிழக அரசு ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு தர வேண்டும் என்று கோஷம் எழுப்புவார்
ஸ்டாலின். மேலும், மத்திய அரசை அனுசரித்து ஆட்சி செய்யும் பழனிசாமியை,
'அடிமை அரசு' என்று கூறி நாள்தோறும் ஆனந்தம் கொள்வார்.
கூடவே,
கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆழ்ந்த துாக்கத்தில் இருந்த சமூக போராளிகளான,
நடிகர்கள் சத்யராஜ், பிரகாஷ்ராஜ், சூர்யா, சிவக்குமார் போன்றோரும்,
கழகத்தின் தயவில் வாழ்க்கை வண்டியை ஓட்டும் நந்தினி, திருமுருகன் காந்தி,
கோவன், பியூஷ் மனுஷ் மற்றும் பல போராளிகள் விழித்து எழுந்து போராட்டக்
களத்திற்கு வந்து விடுவர்.
இவர்கள் தி.மு.க., ஆட்சியில்
டாஸ்மாக்கில் சத்து டானிக் விற்றது போலவும், பழனிசாமி ஆட்சியில் தான்
டாஸ்மாக்கில் மது விற்பது போலவும் கூவ ஆரம்பிப்பர்.
இந்த இரு நாடகங்களில் ஏதேனும் ஒன்றைக் காண, இப்போதே தமிழக மக்கள் தயாராக வேண்டும்!
lll
விழிப்புணர்வு வீடியோ வெளியிடுவாரா விஜய்?
மா.பொய்யாமொழி சங்கர், ராமநாதபுரத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது, தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய், குழந்தைகள், இளைஞர்களுக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோள் காரணமாக, ஒவ்வொரு வீடுகளிலும் குழந்தைகள் தங்கள் குடும்ப உறுப்பினர்களிடம் விஜய்க்கு ஓட்டு சேகரித்தனர்.
அதுகுறித்த வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
விஜய்க்கு ஓட்டு போடச் சொல்லி குழந்தைகள் அழுது அடம்பிடிக்கும் வீடியோக்களை, பெற்றோரே சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். இதிலிருந்து அவர்கள் எந்த அளவு மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர் என்பது தெரிய வருகிறது.
இந்நிலையில், தேர்தல் முடிவுகள் அவர்கள் எதிர்பார்ப்பிற்கு மாறாக இருக்கும் பட்சத்தில், அதை ஏற்க முடியாமல், மேலும் அவர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு, விபரீத முடிவுகளை எடுக்கக்கூடிய நிலை ஏற்படலாம்.
எனவே, பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு மன அழுத்தத்தை குறைக்கும் வகையில், மனோ தத்துவ மருத்துவர்களை அணுகி, ஆலோசனை பெறுவது அவசியம். அதே நேரம், நடிகர் விஜய், சமூக அக்கறையுடன், வெற்றி - தோல்வியை சமமாக எடுத்துக் கொள்ளும் பக்குவத்தை ஏற்படுத்தும் விதமாக, விழிப்புணர்வு வீடியோ வெளியிட வேண்டும்.
இது, அவருக்காக ஓட்டுக் கேட்ட இளம் உள்ளங்களுக்கு அவர் செய்யும் கைமாறாக இருக்கும்!
செய்வாரா விஜய்?
lll
பொய்த்துப் போகும் கணிப்புகள்!
ஜெ.கோபாலசுவாமி, சென் னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் எந்தக் கட்சி மீண்டும் ஆட்சி அமைக்கும் என்பது குறித்து, சில கருத்து கணிப்புகள் வெளியாகி உள்ளன. இக்கணிப்புகள் கடந்த காலங்களில் எத்தனை துாரம் உண்மையாக இருந்துள்ளன என்று கேட்டால், ஒரு சதவீதம் கூட இல்லை என்பதே உண்மை.
கடந்த 2024ல் பார்லிமென்ட் தேர்தல் முடிந்து ஓட்டு எண்ணிக்கை துவங்கியதுமே தொலைக்காட்சிகள் ஒரு நாடகத்தை ஒளிபரப்ப துவங்கின. அதற்கு முதல் நாள் வரை, 'தேசிய ஜனநாயக கூட்டணி, 350 தொகுதிகளுக்கு மேல் வெல்லும்' என ஒற்றைக் குரலில் முழங்கிய எட்டு பிரதான கருத்துக் கணிப்பு நிறுவனங்கள்ஒவ்வொன்றின் கணிப்பும் தவறின.
உண்மையில், என்.டி.ஏ., கூட்டணி வெறும், 29௩ இடங்களை மட்டுமே பெற்றது; பா.ஜ., தனி பெரும்பான்மையிலிருந்து பின்வாங்கியது. எதிர்க்கட்சியான, 'இண்டி' கூட்டணி, 23௨ இடங்கள் பெற்றது; ஆனால், கருத்து கணிப்பாளர்கள், இண்டி கூட்டணிக்கு, 107 முதல் 182 வரை மட்டுமே கணித்திருந்தன.
அதேபோன்று, இண்டியா டுடே சி வோட்டர், என்.டி.ஏ., கூட்டணிக்கு, 3௭1-401 இடங்கள் கிடைக்கும் என்று கணித்தது. ஏ.பி.பி., நியூஸ் சி வோட்டர் 353 - 383 என்று கூறியது; டைம்ஸ் நவ் இ.டி.சி., மற்றும் ரிபப்ளிக் பி மார்க் ஆகியவை, 3௫௮ லிருந்து 3௬௮ வரை மதிப்பிட்டன. சாணக்யா என்ற நிறுவனம், 400 இடங்கள் வரும் என்றது.
இந்நிறுவனங்கள் எல்லாமே ஒரு பொதுவான திசையில் பயணித்தன. என்.டி.ஏ.,வின் ஓட்டு பலத்தை மிகைப்படுத்தி, இண்டி கூட்டணியை குறைத்து மதிப்பிட்டன. ஆனால், ஓட்டுப் பெட்டிகள் அதை வேரோடு பிடுங்கி எறிந்தன.
இது முதல் முறையல்ல; 2004 பார்லிமென்ட் தேர்தலிலும் இதுபோன்று தான், கருத்துக் கணிப்பு நிறுவனங்கள் ஒரே குரலில், என்.டி.ஏ., மீண்டும் ஆட்சிக்கு வரும் என்றன; ஆனால், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி அமைத்தது.
ஒவ்வொரு முறையும் கணிப்புகள் தவறும் போது, அதற்கு விளக்கம் தரப்படுகிறது; மீண்டும் அதே தவறு நிகழ்கிறது.
தேர்தல் ஆணையம் 2009 முதல், ஓட்டுப்பதிவு முடிவதற்கு முன், 'எக்ஸிட் போல்'களை ஒளிபரப்புவதை தடை செய்துள்ளது. அதனால், ஓட்டுப்பதிவு முடிந்தவுடன் கணிப்புகள், சந்தையை ஆக்கிரமித்துக் கொள்கின்றன.
இக்கணிப்பு நிறுவனங்களின் தவறுகள், வாக்காளர்களை தவறாக வழிநடத்துவதோடு நிறுத்திக்கொள்வதில்லை. வெல்பவர் என கணிக்கப்படுபவரை நோக்கி வாக்காளர்களை திசை திருப்பி விடும் வேலையையும் பார்க்கின்றன. இப்போக்கு தேர்தலின் தன்மையையே மாற்றிவிடுகிறது.
அவ்வகையில், தற்போது வெளியாகியுள்ள கணிப்புகளும் எத்தனை துாரம் உண்மையானவை என்பது வரும் 4ம் தேதி தெரிந்து விடும்!
lll
மேலும்
-
(ரெசிபி) முட்டையில்லா சாக்லேட் பனானா கேக்
-
ரெசிபி 1 – ஆந்திர ஸ்டைல் கோங்கரா பச்சடி
-
(ரெசிபி–2) கிராமத்து ஸ்டைல் ஆட்டுக்கறி வறுவல்
-
(டிட் பிட்ஸ்) மைக்ரேன் பிரச்னைக்கு தீர்வு என்ன?
-
(டிட் பிட்ஸ்) பெண்கள் அவசியம் செய்ய வேண்டிய முக்கிய பரிசோதனைகள்
-
(டிட் பிட்ஸ்) வெய்யிலில் நம்மை காத்துக் கொள்ள செய்ய வேண்டியவை