தி.மு.க., முகவர் மாரடைப்பால் உயிரிழப்பு

திருவள்ளூர்: திருவள்ளூரில் ஓட்டு எண்ணும் மைய முகவராக பணியாற்ற வந்த, தி.மு.க, நிர்வாகி மாரடைப்பால் உயிரிழந்தார்.

திருவள்ளூர் அடுத்த பூண்டி, பட்டரைப்பெரும்புதுாரைச் சேர்ந்தவர் பாஸ்கர், 51; தி.மு.க., பூண்டி மேற்கு ஒன்றிய அவை தலைவர். திருவள்ளூர் அடுத்த செவ்வாப்பேட்டையில், நான்கு சட்டசபை தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணும் மையம் அமைக்கப்பட்டிருந்தது.

இங்கு, திருவள்ளூர் தொகுதி தி.மு.க., வேட்பாளர் ராஜேந்திரனுக்கு முகவராக பணியாற்ற, நேற்று காலை பாஸ்கர் வந்திருந்தார்.

ஓட்டு எண்ணிக்கை தொடங்கும்போது, பாஸ்கருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே அவரை, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு மருத்துவர்களின் பரிசோதனையில் அவர் உயிரிழந்தது தெரிய வந்தது.

Advertisement