முதல்வராக விஜய் பதவியேற்பு முதல் சென்னை - லக்னோ அணிகள் பலப்பரீட்சை வரை; இன்று (மே 10) முக்கிய நிகழ்வுகள்!
நமது நிருபர்
தமிழகம், தேசிய மற்றும் சர்வதேச அளவில் இன்று நடக்கும் முக்கிய நிகழ்வுகள். இன்று (மே 10) நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய செய்திகள் என்னென்ன?
அது எத்தனை மணிக்கு என்பது குறித்து ஓர் சிறப்பு அலசல். மேலும் தொடர்ந்து விவரங்களை அறிய தினமலர் இணையதளம் தொடர்ந்து படியுங்கள்.
* தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், இன்று காலை 10:00 மணிக்கு, தமிழக முதல்வராக பதவி ஏற்கிறார். தமிழகத்தில், 59 ஆண்டுகளுக்கு பின், அ.தி.மு.க., தி.மு.க. அல்லாத புது கட்சியின் ஆட்சி அமைகிறது.
* தவெக தலைவர் விஜய் இன்று தமிழக முதல்வராகப் பதவியேற்க உள்ள நிலையில், உலகப்புகழ் பெற்ற மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக், ஒடிசா மாநிலம் புரி கடற்கரையில் பிரம்மாண்ட மணல் சிற்பம் ஒன்றை உருவாக்கி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
* தமிழக முதல்வராக விஜய் இன்று பதவியேற்கும் விழா, சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் 20 இடங்களில் எல்.இ.டி. டிவியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
* திருப்பத்தூர் தொகுதி தவெக வேட்பாளர் சீனிவாசன் சேதுபதி, ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் பெற்ற வெற்றியை எதிர்த்தும், அவர் எம்எல்ஏவாக பதவியேற்பதைத் தடுக்கக் கோரியும் பெரியகருப்பன் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை இன்று உயர்நீதிமன்றத்தின் விடுமுறைக் கால அமர்வு விசாரிக்க உள்ளது.
* தமிழகத்தில் இன்றும், நாளையும், ராமநாதபுரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் துாத்துக்குடி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன், கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
* பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டிகள்;
* சென்னை - லக்னோ
நேரம்: மதியம் - 3:30; இடம்: சென்னை.
* பெங்களூரு - மும்பை
நேரம்: இரவு 7:30 மணி; இடம்: நியூ ராய்ப்பூர்.
விஜய்க்கு வாழ்த்துக்கள். இனி திமுகவின் காட்டில் மழை தான். பழைய ஊழல், அராஜகம் முதலியன கிளறப்பட மாட்டாது. மூன்றாவது கழகம் இணைந்து விட்டது.