ஆண்டவன் மீது ஆணையிட்டு பதவியேற்றார் முதல்வர் விஜய்
சென்னை: சென்னை நேரு ஸ்டேடியத்திற்கு தமிழக முதல்வராக ஆண்டவன் மீது ஆணையிட்டு பதவியேற்றார் விஜய்.
தமிழகத்தில் தமிழக வெற்றிக்கழகம் தலைமையில் புதிய அரசு ஆட்சி அமைத்தது. புதிய அரசு பதவியேற்பு விழா சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் பிரமாண்டமாக நடந்தது. கோட் சூட் அணிந்து, தமிழக முதல்வராக, இன்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பதவி ஏற்றார். அவருக்கு தமிழக கவர்னர் அர்லேக்கர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
தமிழகத்தில் ராஜாஜி முதல் ஸ்டாலின் வரை, இதுவரை, 12 முதல்வர்கள் இருந்துள்ளனர். நபர்கள் அடிப்படையில், 13வது முதல்வராக விஜய் பதவியேற்றார்.
முன்னதாக, நீலாங்கரை இல்லத்தில் இருந்து விஜய் நேரு ஸ்டேடியத்திற்கு காரில் பலத்த பாதுகாப்புடன் வந்தார். வழிநெடுகிலும் விஜய்க்கு தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்தனர். அவர்களை பார்த்து விஜய் காரில் இருந்த படியே கை அசைத்தார். கருப்பு பேன்ட், வெள்ளை சட்டை அணிந்து, பதவியேற்பு விழாவுக்கு நேரு உள் விளையாட்டு அரங்கம் வந்தார் விஜய்; அவருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
வந்தே மாதரம்
தமிழக அமைச்சரவை பதவியேற்பு விழாவில் வந்தே மாதரம் பாடப்பட்டது இதுவே முதல் முறை.
பதவியேற்பு
செங்கோட்டையன், ஆனந்த், ஆதவ்அர்ஜூனா, அருண்ராஜ், நிர்மல்குமார், வெங்கட்ரமணன், ராஜ்மோகன், பிரபு, கீர்த்தனா ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
பங்கேற்பு
காங்கிரஸ் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், விஜய் பெற்றோர் சந்திரசேகர், ஷோபா, நடிகை திரிஷா, மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம், இந்திய கம்யூ., மாநில செயலாளர் வீரபாண்டியன் மற்றும் பலர் பங்கேற்றனர். விஜய் அரசுக்கு ஆதரவு தெரிவித்த எம்எல்ஏக்களும் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டனர்.
திருமா வாழ்த்து
முதல்வராக பதவியேற்கவுள்ள தவெக தலைவர் விஜய்க்கு விசிக சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்கள் என திருமாவளவன் தெரிவித்தார்.
நேரு ஸ்டேடியத்தில் தமிழக வெற்றிக்கழத்தினர் டிவிகே...டிவிகே...டிவிகே என கோஷம் எழுப்பினர். நிருபர்களிடம் தவெகவினர் கூறியதாவது: 'சி.ஜோசப் விஜய் எனும் நான்' என்ற அந்த ஒரு வார்த்தையை கேட்கத்தான் காத்திருக்கிறோம்.
விஜய் முதல்வராக நியமிக்கப்பட உள்ளார். எங்களுக்கு ரொம்ப சந்தோஷம், அளவற்ற சந்தோஷம். இங்கே நிற்பதற்கு எல்லாம் காரணம் விஜய் தான். கட்சிக்காக நாங்கள் வேலை செய்து இருக்கிறோம். நாங்கள் மக்கள் பணியை சிறப்பாக செய்ய போகிறோம், அதை நினைத்து ரொம்ப சந்தோஷம் அடைகிறோம். விஜய் மக்களுக்கு நல்லாட்சி தருவார். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்
தமிழகத்தில் தவெக தலைமையிலான புதிய அரசு இன்று பதவியேற்பு; இந்த பதவியேற்பு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இந்த விழா, தினமலர் யூடியூப் உள்ளிட்ட இணையத்தில் நேரலை ஒளிபரப்பு செய்யப்பட்டது.
லைவ் வீடியோ பார்க்க கிளிக் செய்யவும்.
இவர்கள் " ஆண்டவன் " என்று கமல் ஹாசனை மனதில் நினைத்து பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்கள் போலும். கமல் ஹாசனை ஆழ்வார்பேட்
ஆண்டவர் என்று சொல்லியது நினைவில்லையா மக்களே
பதவிப் பிரமாணம் எடுக்கும்போது இந்த அளவு உடல் மொழி தேவை இல்லையே. இது என்ன திரைப் பட வசனமா ? ஏற்ற இறக்கங்கள் ஆகியவற்றுடன் பேசுதல்.
எல்லா திருடர்களும் திருட்டை மறைக்க ஆண்டவனைத்தான் கூப்புடுகின்றனர்
ஏசப்பா
ஜோசப் விஜய் ஆகிய நான் என்று அவரே சொல்லி பதவி ஏற்ற பிறகு எதற்கு முதல்வராக பதவயேற்றார் விஜய் என்று செய்தி பதிவிட வேண்டும்.
பாகிஸ்தானில் எல்லா அமைச்சரவை கூட்டங்களிலும் பிஸ்மில்லா என்று கண்களை இரு கை உயர்த்தி தொடங்குவார்கள்…. ஆண்டவனே பார்த்து கொள்வான் நம்பிக்கை
A Master Plan by the BJP to Enter Tamil Nadu
TheBJP wants to break a specific slogan in Tamil Nadu. If a state party DMK gains votes by being "Anti-BJP," that trend must be stopped first.
To do this, they indirectly support emerging parties that can change this thinking, as direct support for the AIADMK has failed.
The plan is to let Congress grow with the support of this new party TVK, as Congress is seen as a weaker opponent for the BJP. This would make it easier for the BJP to fight Congress later, removing the DMK and AIADMK and replacing "Dravidian ideology" with "Hindutva ideology"—especially since after Vijay, there is no successor and no clear long-term ideology.
If you ask yourself these questions, you can connect the dots:
Political Interest: Why did Modi or Amit Shah not show much interest in holding rallies for the BJP?
The Dress Code: Why did Annamalai wear the same dress code as Vijay on voting day? While Stalin wore it during the campaign, Annamalai wore it for the first time since leaving the IPS.
The TVK Migration:
Why did Sengottaiyan join TVK after meeting Amit Shah?
Media Coverage: Why did all the TN media show Vijay all the time, starting from his own home?
Accurate Surveys:
How did Axis My India, a survey company aligned with the NDA, guess the exit polls so accurately for TVK?
The Strategist:
Why did Aadhav join the DMK and later the VCK? He learned the mindset and strategies of the marginalized people and successfully moved that vote bank to TVK.
Hidden Members:
Hidden BJP members may have entered TVK. For example, CTR Nirmal Kumar, who was very close to Annamalai, could have provided a clear roadmap for victory that Vijay trusted from day one.
The Script:
Why did the writer for Vijay not write anything majorly against the BJP and instead projected the DMK as the main villain?
The Campaign Effort:
Why was Edappadi the only one traveling everywhere for campaigning, while many BJP MLAs did not put in much effort?
Taglines:
Why is the "Theeya Sakthi DMK" tagline being used so frequently and registered with youngsters now?
The Blame Game:
Why was the DMK blamed even when the Election Commission filed cases for campaign violations?
National Narrative:
Why are national channels highlighting the claim that "Dravidians are demolished" in Tamil Nadu?
Election Symbols:
Why did Seeman struggle to get an election symbol, while Vijay got the "Whistle" symbol very easily?
Jananayagan Row:
The Jananayagan film issue was a central government matter, yet many felt the DMK was responsible. Why?
Cancelled Events:
Vijay deliberately cancelled many campaign events even when he had permission. Why was the DMK blamed for this, even though the ECI was in control?
Transport Issues:
Transport officials are under the control of the ECI during elections. Why did no one ask why people struggled with bus transport on voting day, and why was the blame placed on the DMK?
The Long Game:
The RSS knows about the close friendship between Rahul Gandhi and Vijay very well. Rahul wanted Vijay to enter politics and spoke to him in person 17 years ago 2009 Aug. After that meeting, Vijay's movies shifted slowly from "lover boy" roles towards social themes.
Now that the AIADMK is broken, the same plan will continue to bring down the DMK. Later, it will be easier to battle the Congress—which is now aligned with TVK—using Hindutva religious politics. TheBJPfeels this is the longest but most effective way to end Dravidian ideology in Tamil நாடு.
தமிழா விழித்து எழு
இங்க இப்பிடி காப்பி பேஸ்ட் செஞ்சு [உபாயம் வாட்ஸாப் யூனிவர்சிட்டி] பாஜக வேண்டாம் ன்னு இருக்குற தமிழ்நாட்டு வாக்காளர்கள் படிக்கும்படி போட்டு என்ன பயன் எடுப்புகளே ?
aagur..no use...get lost
ஆண்டவன் மீது என்றால் இதற்க்கு முன்னர் ஆண்ட DMK எண்ணி பதவி ஏற்றுக்கொண்டார்களோ
இந்த நாட்டின் சுதந்திரதிற்கு எந்த கிருஸ்தவனும் போராடியதோ தூக்கு மேடை ஏறியதோ இல்லை கிருஸ்தவ பிரிட்டிஷ் ஆட்சிக்கு ஆதரவாக இருந்தனர், ஆனால் சுதந்திர இந்தியாவில் அனைத்து சுகபோகங்களையும் அனுபவித்து வருகின்றனர். விஜய் நடுநிலை பேசுவதை விட நடுநிலையாக நடிந்துக் கொள்ள வேண்டும். சினிமா மனநிலையில் இருந்து வெளிவர வேண்டும்.
ஜே.சி குமரப்பா கிறிஸ்தவர் சுதந்திரத்துக்கு போராடினார் தீனபந்து ஆண்டிரூஸ் காங்கிரஸ் தியாகி .சுதந்திர போராட்டத்தில் மகாத்மாவின் ஒரேசொல்லுக்காக மத இந வேறுபாடுகளை மறந்து அனைவரும் கலந்து கொண்டநர்மேலும்
-
கிரிக்கெட் போட்டி: கே.ஆர்.சி.சி., மேனகா மில்ஸ் அணிகள் வெற்றி
-
மழைக்காக சிறப்பு வழிபாடு
-
கோவை கோர்ட்களில் நீதிபதிகள் மாற்றம்
-
கள்ளக்குறிச்சியில் த.வெ.க., வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
-
ராமேஸ்வரம் ரயில்வே பிட் லைனில் கழிவுநீர் : நோய் பரவும் அபாயம்
-
----மலையில் மழை இல்லாததால் ஆற்றில் நீர் வரத்து இல்லை --விவசாயிகள் எதிர்பார்ப்பு