ரோட்டோரத்தில் தேங்கி நிற்கும் மழை நீர் தொற்றுநோய் பரவும் அபாயம்
காரியாபட்டி: மதுரை - துாத்துக்குடி நான்கு வழிச்சாலையில் ஆவியூர் அருகே மழை நீர் தேங்கி அசுத்தமாக கிடக்கிறது. தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதால் அப்புறப்படுத்த வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
காரியாபட்டி அதனைச் சுற்றி சில தினங்களுக்கு முன் கனமழை பெய்தது. பல்வேறு நீர் நிலைகளுக்கு மழை நீர் கிடைத்தது. பெரும்பாலான ஓடைகள், நீர்வரத்து வழித்தடங்கள் சரிவர இல்லாததால், நீர்நிலைகளுக்கு செல்ல வழி இன்றி பல இடங்களில் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது.
காரியாபட்டி - ஆவியூர் அருகே மதுரை தூத்துக்குடி நான்கு வழி சாலை ஓரத்தில் வனத்துறை நர்சரி அருகே மழைநீர் செல்ல வழி இன்றி பல நாட்களாக தேங்கி அசுத்தமாக கிடக்கிறது.
துர்நாற்றம் ஏற்பட்டு காற்று வீசும் போது அப்பகுதியில் போவோர் வருவோர் முகம் சுளிக்கின்றனர்.
தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதால் அதனை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மேலும்
-
சட்டசபையில் இன்று நம்பிக்கை ஓட்டெடுப்பு; தினமலர் நேரலை காணத்தவறாதீர்கள்
-
முட்டாள்கள் மட்டுமே அமெரிக்காவிற்கு எதிராகக் குரல் எழுப்ப முடியும்; டிரம்ப் காட்டம்
-
'ஆடி எஸ்.க்யூ., 8' எஸ்.யூ.வி., 4 வினாடியில் 100 கி.மீ., வேகம்
-
எம்.ஜி., 'மெஜெஸ்டர்' எஸ்.யூ.வி., 5மீ நீளம் உள்ள 7 சீட்டர் எஸ்.யூ.வி.,
-
350 சி.சி.,க்கு மாறிய 'ட்ரையம்ப்'
-
வாகன அப்டேட்ஸ்