நம்பிக்கை ஓட்டெடுப்பில் விஜய் அரசு வெற்றி
சென்னை: தமிழக சட்டசபையில் தவெக அரசு தொடர்வதற்கான நம்பிக்கை கோரும் தீர்மானத்திற்கு ஆதரவாக 144 பேர் ஓட்டளித்தனர். எதிராக 22 பேரும், 5 பேர் நடுநிலை என்றும் ஓட்டளித்தனர். நம்பிக்கை ஓட்டெடுப்பில் விஜய் அரசு வெற்றி பெற்றது.
தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள விஜய், இன்றைக்குள் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என, கவர்னர் ராஜேந்திர அர்லேக்கர் உத்தரவிட்டுள்ளார். எனவே, இன்று (மே 13) சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடந்தது. காலை 9.30 மணிக்கு அவை துவங்கியதும் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முதல்வர் விஜய் முன்மொழிந்தார்.
ஆதரவு
இதை தொடர்ந்து தீர்மானம் மீதான விவாதம் தொடங்கியது. மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், முஸ்லிம் கட்சிகள் எம்எல்ஏக்கள் அரசுக்கு ஆதரவு அளித்து பேசினர். காங்கிரஸ் ஆதரவு அளிப்பதாக அக்கட்சி குழு தலைவர் ராஜேஷ் குமார் தெரிவித்தார். திமுக ஓட்டெடுப்பில் பங்கேற்காமல் வெளிநடப்பு செய்தது.
நம்பிக்கை ஓட்டெடுப்பில் ஓட்டளித்தோர் விபரம் பின்வருமாறு:
பங்கேற்றவர்கள்- 171
* ஆதரவு; 144
(ஆதரவாக ஓட்டளித்தவர்கள் விபரம்; தவெக 105, அதிமுக (சிவி சண்முகம், வேலுமணி தரப்பு- 25, காங்கிரஸ்-5, விசிக-2, இந்திய கம்யூ-2, மார்க்சிஸ்ட்-2, முஸ்லிம் லீக்-2, அமமுக-1)
* எதிர்ப்பு; 22
(எதிர்ப்பு- அதிமுக (இபிஎஸ் தரப்பு)- 22
* நடுநிலை; 5
(நடுநிலை; பாமக-04, பாஜ-01)
* ஓட்டெடுப்பில் 60 பேர் பங்கேற்கவில்லை.
தீர்மானத்தை ஆதரிப்போர் அதிகமாக இருப்பதால் முதல்வர் விஜயின் நம்பிக்கை கோரும் தீர்மானம் நிறைவேறியது, வெற்றி பெற்றது என சபாநாயகர் அறிவித்தார். அவர் முதல்வர் விஜய்க்கும், அமைச்சரவைக்கு வாழ்த்து தெரிவித்தார்.
@block_G@
முதல்வர் விஜய் மீதான நம்பிக்கை ஓட்டெடுப்பு வெற்றிகரமாக முடிந்த பின்னர் தமிழக சட்டசபையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் ஒத்திவைத்தார்.block_G
தினமலர் நேரலை
சட்டசபையில் நடக்கும் நம்பிக்கை ஓட்டெடுப்பு தினமலர் யூடியூப் சேனல், வெப்சைட் உள்ளிட்ட இணையத்தில் நேரலை ஒளிபரப்பு செய்யப்படும்.
லைவ் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
கூட்டு ஆட்சி எல்லாம் மத்திய பாஜாகாவால் வந்த வினை அண்ணாமலையை பதவியிலிருந்து நீக்கியதால் இப்பொழுது இந்திய தேசரவிரோதிகள் கையில் தமிழகம் திமுகவைவிட மோசமான தற்குறிகள்
தமிழக சட்டமன்றத்தில் முதல் முறையாக முதல்வர் கிறிஸ்துவர் எதிர்க்கட்சி தலைவர் கிறிஸ்துவர் சபாநாயகர் கிறிஸ்துவர். கேட்டால் மத நல்லிணக்க தலைகள் என்பார்கள்
தவெகவில் திமுக அதிமுகவினர் ஆதிக்கம் செய்வார்கள். பல குதிரைகள் இழுக்கின்றன.
லஞ்ச லாவண்யங்கள் பற்றி வெளிவரும் செய்திகளை பாஜக ஆரயனும்.
கருத்து சொல்ல ஒன்றும் இல்லை இந்த நிகழ்வை பற்றி.....
அப்படியே சொல்லீட்டாலும் ......
சென்ற பிரபவ அதாவது 60 -ஆண்டுகளுக்கு பிறகு இப்போதுதான் திராவிட கட்சிகளுக்கும் ஒரு சமாப்தி கட்ட முடிந்தது இனி எந்த திராவிட கட்சியும் இனி தலை தூக்க முடியாது விஜயின் நேர்மை - தயாள - குணம் - அணுமுறை எல்லாமே அரசியலில் தமிழகத்திற்கு ஒரு புதுமை உண்டாகும்
அதிமுக தயவிலும்? திமுக கூட்டணி கட்சிகளின் தயவிலும் ஆட்சி அமைப்பதற்கு பதில்? ........கேட்டா மாற்று அரசியல்னு உருட்டுவானுங்க?
வாழ்த்துக்கள். தங்கள் தலைமையில் தமிழ் நாட்டுக்கு ஒரு விடிவு காலம் அமையும் என்ற நம்பிக்கை உண்டு. இருண்ட யுகம் நீங்க இறைவன் துணை நிற்பாராக
எவனும் நல்ல ஆட்கள் இல்லை . பிசினஸ் போலவே இருக்கு
When Speaker says it is my discretionary powers to permit faction leader Shri Velumani from AIADMK but at the same time why the Speaker maintains silent when the Congress, Communist VCK, IUML and DMK go on taking the name of BJP which has alone member. If these parties are secular why not field a Hindu candidate in a constituency where the population of Muslim and Christian community is dominated. Though four members of BJP had in the then assembly and now reduced to One, the Tamilnadu BJP President should take the blame and responsibility. When the Hindu electorates will awake from slumber?
முதல்வரே, ஜாக்கிரதையாக இருக்கவும். இன்று 25 ஆதரவு தெரிவித்தவன் சில நாட்களுக்கு முன் கண்ணழகி வேண்டும் என்று பகிரங்கமாக கூட்டத்தில் பேசினார்
ஆதரவு தெரிவித்த மற்றவன் எல்லாம் பேசாத பேச்சா