'நீட்' தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம்: மஹா., கோச்சிங் சென்டர் நிறுவனர் கைது
புதுடில்லி: 'நீட்' தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில், மஹாராஷ்டிராவைச் சேர்ந்த பயிற்சி நிறுவனத்தின் உரிமையாளர் சிவராஜ் ரகுநாத் மோடேகோன்கரை சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர்.
இளநிலை மருத்துவ படிப்புக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வு நாடு முழுதும் கடந்த 3ம் தேதி நடந்தது. தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 22 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த தேர்வை எழுதினர்.
தேர்வுக்கு முன்பாகவே, இதற்கான வினாத்தாள் கசிந்ததாக புகார் எழுந்ததை அடுத்து, இந்தாண்டு நடத்தப்பட்ட நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டது. முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ., வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
மஹாராஷ்டிரா, ராஜஸ்தான், டில்லி உட்பட பல்வேறு பகுதிகளில் சி.பி.ஐ., அதிகாரிகள் குழுக்களாக பிரிந்து சோதனை நடத்தி வருகின்றனர்.
10 நாட்கள்
முதற்கட்டமாக, நீட் வினாத்தாள் கசிந்தது தொடர்பாக மஹாராஷ்டிராவின் நாசிக்கைச் சேர்ந்த சுபம் கைர்னார், ராஜஸ்தானைச் சேர்ந்த தினேஷ் பிவால், மங்கிலால் பிவால் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து, நீட் வினாத்தாள் தயாரிப்பு குழுவில் இருந்த மஹாராஷ்டிராவின் புனேவைச் சேர்ந்த முன்னாள் வேதியியல் பேராசிரியர் குல்கர்னி, பேராசிரியை மனிஷா மாந்தாரே ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள், ஏற்கனவே கைது செய்யப்பட்ட மனிஷா வாண்டாரே உதவியுடன், பயிற்சி வகுப்புகளில் பயின்ற மாணவர்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு வினாத்தாளை வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.
இவர்கள் அளித்த தகவலின்படி, மஹாராஷ்டிராவின் லத்துாரில் செயல்பட்ட ரேணுகாய் பயிற்சி வகுப்பில் சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இதில், அதன் உரிமையாளர் சிவராஜ் ரகுநாத் மோடேகோன்கர் நீட் வினாத்தாளை, தேர்வு நடப்பதற்கு 10 நாட்கள் முன்பாகவே விலைக்கு வாங்கி, அதை மாணவர்களுக்கு கசிய விட்டது உறுதியானது.
10 பேர் கைது
அவரது மொபைல் போனில், 3ம் தேதி நடந்த தேர்விற்கான வினாத்தாள் நகல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. நீட் வினாத்தாளையும், அதற்கான விடைகளையும் மாணவர்களுக்கு கையாலேயே எழுதி கொடுத்ததுடன், தேர்வு முடிந்த மறுநாள் அது தொடர்பான தடயங்கள் அனைத்தையும் சிவராஜ் அழித்ததும் விசாரணையில் உறுதியானது.
இதையடுத்து, அவரை நேற்று முன்தினம் கைது செய்த போலீசார், மொபைல் போனை பறிமுதல் செய்து தடயவியல் விசாரணைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த வழக்கில் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை தொடர்ந்து நடந்து வருவதால், கைது எண்ணிக்கை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
@block_B@ தேர்வு முகமை தலைவருக்கு சம்மன்! ராஜ்யசபா செயலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்படுவதாவது: காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் தலைமையில், கல்வி, பெண்கள், குழந்தைகள், இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறைக்கான பார்லிமென்ட் நிலைக் குழு செயல்படுகிறது. இது, நீட் தேர்வு வினாத்தாள் கசிவு குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக நாளை மறுநாள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க என்.டி.ஏ., எனப்படும் தேசிய தேர்வு முகமை தலைவர் பிரதீப் குமார் ஜோஷிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அப்போது, ராதாகிருஷ்ணன் குழுவின் அறிக்கையின் பரிந்துரைப்படி என்.டி.ஏ.,வில் மேற்கொள்ள உள்ள சீர்திருத்தங்கள் குறித்தும், வினாத்தாள் கசிவு வழக்கின் நிலை பற்றியும் கேட்டறியப்படும். இந்த ஆலோசனையில் பங்கேற்க கல்வி அமைச்சகத்தின் உயர் கல்வித் துறைச் செயலர் வினீத் ஜோஷிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.block_B
ஜே ஈ ஈ ஈ போன்றே நீட் தேர்வும் முழுக்க ஆன்லைன் தேர்வாக கொண்டுவர வேண்டும்
போன்றே
பிஜேபி நம்ம ஆட்சி தொடரவேண்டும் என்றால் நடுத்தர மக்கள் பற்றின சிந்தனை வேண்டும். இந்த நீட் மாடல் இருக்கட்டும். இதற்கு தருண் வெயிட்டேஜ் மார்க் குக்கும் கொடுங்கள். இந்த மாதிரி இன்ஸ்டிடியூட் கொள்ளை அடிக்கும் பணத்தை தடுத்தால் அது சேவிங்ஸ் ஆகா திரும்ப வரும்
அதெல்லாம் ஒன்னும் ரொம்ப கவலைப் படாதீங்க
ஒரு நல்ல வக்கீலை புடிங்க நிறைய காசு கொடுங்க
அப்படி ஒரு நிகழ்ச்சி நடக்கவே இல்லை என்று அவர் நிரூபித்து காட்டுவார்
அப்புறம் சந்தோஷமா வெளியில வாங்க
செய்ததை மீண்டும் செய்யுங்க
வாழ்த்துக்கள்
இப்படிக்கு கொள்ளையடிக்க வந்த வெள்ளையன் எழுதிய சட்டம்
வட இந்தியர், பல அரசு துறையில் நுழைவது இவ்வாறே.
அப்படியா >> அவங்க நம்மளை பத்தி என்ன நினைக்கிறாங்க ன்னு நமக்குத் தெரியாமல் இருப்பதே நல்லது ....
அந்த ஒருத்தராலோ அல்லது ஒருசிலராலோ அல்லது வினாத்தாள் தானாகவே வெளிவந்துவிட்டது என்று நம்பி விட்டோம். இதில் BJP அமைச்சர்களுக்கு பங்கு இல்லை... நம்பிவிட்டோம்
ஐந்தாறு கேள்விகள் மட்டுமே வெறும் பத்து பதினைந்து பேருக்கு மட்டுமே லீக் ஆகி உள்ளது. இதை ஒரு பெரிய விஷயமாக ஊதி பெரிதுபடுத்த வேண்டாம். பரீட்சை என்று இருந்தால், சிறிய கசிவு என்பதும் இருக்க தான் செய்யும். எதையாவது காரணம் காட்டி, நீட்டை நிறுத்த திராவிட கூட்டம் யோசித்துக்கொண்டிருக்கிறது. அதனால் இந்த விஷயத்தை பெரிதுபடுத்த தேவை இல்லை.
கஷ்டப்பட்டு படிச்சவங்க நிலையையும் எண்ணிப்பாருங்க தாமரை ....
யோவ் நீ மண்டைகசாயம்
மாணவன் எதிர்காலம் ?
எப்படி தான் இப்படி பேசுறாங்களோ .....எத்தனை பேரு தவறான முடிவு எடுக்க வாய்ப்பு இருக்கு ...
எல்லோரையும் டிஸ்மிஸ் செய்யுங்கள். சொத்துக்களை பறிமுதல் செய்யுங்கள். அவர்கள் வழக்கு போட்டு நிரூபிக்கட்டும். சரியான தண்டனை இல்லையெனில் இது தொடர்கதை தான்
குற்றவாளிகள் சம்பாதித்த பணத்தில் பங்கு வாங்கிக் கொண்டு பல ஆண்டுகள் நேர்மையாக செயல்படுவது போல பாவனை செய்து ஆதாரம் இல்லை என தப்பிக்க விட்டுவிடுவர்.
இப்புடி கைது, ரிமாண்ட்னு மூவாயிரம் பேரை புக் பண்ணி கடைசியில் எந்த ஆதாரமும் இல்லை, வினாத்தாள் தானே வெளியேறி வாட்சப் வழியா எஸ்கேப் ஆயிருச்சுன்னு ஊத்தி மூடி அனைவரும் விடுதலை ஆயிருவாங்க.மேலும்
-
பத்மஸ்ரீ சிலம்பாட்ட கலைஞருக்கு பாராட்டு பட விளக்கம்
-
பாரம்பரிய நாடகக் கலையில் கல்விசார் தெருக்கூத்து பயிற்சி
-
அ.தி.மு.க., செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம்
-
போட்டோ ஏ.டி.வி.டி., எஸ்., பக்கத்திற்கு... 25க்கு 3 அ.தி.மு.க., நிர்வாகிகள் 100 பேர் த.வெ.க.,வில் ஐக்கியம்
-
தற்கொலை செய்ய பீச்சுக்கு வந்த பெண் போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைப்பு
-
போலீஸ் செய்திகள்