ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் ஒரு திருப்புமுனை ஏற்படும்; சொல்கிறார் அதிபர் டிரம்ப்

5


வாஷிங்டன்: ஈரானுடனான அமெரிக்க-இஸ்ரேல் மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சிகளில் ஒரு பெரிய திருப்புமுனை விரைவில் ஏற்படக்கூடும் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: நான் தற்போது வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் இருக்கிறேன். இங்கு சவுதி அரேபிய அதிபர் முகமது பின் சல்மான் அல் சவுத்; ஐக்கிய அரபு அமீரகத்தின் முகமது பின் சயத் அல் நஹ்யான்; கத்தாரின் அமீர் தமீம் பின் ஹமாத் பின் கலீபா அல் தானி, பிரதமர் முகமது பின் அப்துல் ரஹ்மான் பின் ஜாசிம் பின் ஜாபர் அல் தானி மற்றும் அமைச்சர் அலி அல்-தவாடி; பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனீர் அகமது ஷா; துருக்கியின் அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன்; எகிப்தின் அதிபர் அப்தெல் பத்தா அல்-சிசி; ஜோர்டானின் மன்னர் இரண்டாம் அப்துல்லா; மற்றும் பஹ்ரைனின் மன்னர் ஹமாத் பின் ஈசா அல் கலீபா ஆகியோருடன் ஈரான் உடனான பேச்சுவார்த்தை மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து தொலைபேசியில் கலந்துரையாடினோம்.

இது தவிர, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடனும் நான் தனியாக ஒரு தொலைபேசி உரையாடலை மேற்கொண்டேன்; அதுவும் அதேபோன்று மிகச் சிறப்பாக அமைந்தது. ஈரான் உடனான ஒப்பந்தம் குறித்து இறுதி கட்டமாக தற்போது விவாதிக்கப்பட்டு வருகின்றன; அவை விரைவில் அறிவிக்கப்படும். ஈரானுடனான அமெரிக்க-இஸ்ரேல் மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சிகளில் ஒரு பெரிய திருப்புமுனை விரைவில் ஏற்படக்கூடும். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

Advertisement