ரூ.2,498க்கு தபால் துறையின் ரூ.17 லட்சம் மருத்துவ காப்பீடு
'இ ந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கி'யின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் ஆண்டுக்கு 2,498 ரூபாய் பிரீமியம் செலுத்தினால் 17 லட்சம் ரூபாய் காப்பீட்டு தொகை வழங்கப்படுகிறது என வங்கியின் முதுநிலை மேலாளர் அருண்குமார் ராஜசேகரன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
தபால் துறையின் 'இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி மற்றும் நிவா பூபா இன்சூரன்ஸ்' நிறுவனமும் இணைந்து உத்தரவாத பென்ஷன் திட்டம், விபத்து காப்பீட்டு திட்டம் என பல்வேறு இன்சூரன்ஸ் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அதன்படி, ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் 1,699 ரூபாய் பிரீமியம் செலுத்தினால் 2 லட்சம் ரூபாய் வழங்கும் மருத்துவ காப்பீட்டு திட்டம் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில், பாலிசிதாரரின் எதிர்பாராத மருத்துவ சிகிச்சைக்கு முன் 30 நாட்கள், பின் 60 நாட்கள் என செலவினங்கள் கணக்கிடப்பட்டு 2 லட்சம் ரூபாய் காப்பீட்டு (செலவினம் ஆன தொகை) வழங்கப்படுகிறது.
'சூப்பர் டாப் அப்' திட்டத்தில் இதனுடன் கூடுதல் பிரீமியம் 899 ரூபாய் என 2,498 ரூபாய் செலுத்தினால் பாலிசிதாரருக்கு 'டே கேர் நவீன சிகிச்சைகள், 537 பிளஸ் நடைமுறைகள், அவசர தரைவழி ஆம்புலன்ஸ் சேவைக்கு 1000 ரூபாய்' ஆகிய சலுகைகளுடன் அனைத்து மருத்துவ சிகிச்சைகளுக்கான காப்பீட்டு தொகையாக 17 ரூபாய் லட்சம் வழங்கப்படுகிறது .
இந்த கூடுதல் காப்பீட்டு தொகை சம்பவம் நடந்த ஒன்று முதல் மூன்று மணி நேரத்தில் விடுவிக்கப்படுவதால் இத்திட்டத்திற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது என்றார்.
மேலும்
-
சுய விருப்பத்துடன் கையெழுத்திட்டு தரும் ராஜினாமா கடிதத்தை ஏற்பதே என் கடமை: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் விளக்கம்
-
அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., இசக்கி சுப்பையா ராஜினாமா
-
செங்கல் சூளையில் மாமூல் கேட்ட த.வெ.க., நிர்வாகி நீக்கம்
-
'பாலியல் குற்றவாளிகளின் மரண தண்டனையை மக்கள் முன் நிறைவேற்றலாம்'
-
முதல்வர் விஜய் இன்று டில்லி பயணம்; பரபரக்கும் அரசியல் களம்
-
'கேட்' தேர்வு மதிப்பெண்கள் மூலம் விமானப்படை பணியில் சேரலாம்