சிறிய ஏற்றம் வருவதற்கான வாய்ப்பு உள்ளது
நேற்று இறக்கத்துடனே துவங்கிய நிப்டி, முற்பகலில் சற்று மீண்டு 55 புள்ளிகள் உயர்ந்தது. இருப்பினும், நாளின் இறுதியில் 118 புள்ளிகள் குறைந்தே முடிந்தது. 18 பரந்த சந்தை குறியீடுகளில் 12 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 6 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன.
இவற்றில், 'நிப்டி மைக்ரோகேப்250' குறியீடு அதிகபட்சமாக 0.72 சதவீத உயர்வுடனும், 'நிப்டி100' குறியீடு அதிகபட்சமாக 0.37 சதவீத சரிவுடனும் முடிந்தன. 21 துறை சார்ந்த குறியீடுகளில் 6 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 1 குறியீடு மாற்றம் ஏதுமின்றியும்; 14 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன.
இவற்றில், 'நிப்டி மெட்டல்' குறியீடு அதிகபட்சமாக 1.10 சதவீத ஏற்றத்துடனும், 'நிப்டி கன்ஸ்யூமர் டியூரபிள்ஸ்' குறியீடு அதிகபட்சமாக 1.05 சதவீத இறக்கத்துடனும் முடிவடைந்தன.




ஸ்டோக்காஸ்ட்டிக் சற்று ஓவர் பாட்டாக மாறியுள்ளது என்பது மட்டும்தான் ஏற்றம் தொடர்வதற்கான வாய்ப்பு குறைவு என்பதற்கான எச்சரிக்கை சமிக்ஞையாக உள்ளது. தற்போதைய சூழலில் 24,000 - 24,050ல் வலுவானதொரு ரெசிஸ்டென்ஸ் உள்ளது. இதனைத் தாண்டினால் 24,180 வரை நிப்டி செல்ல வாய்ப்புள்ளது.
இறக்கம் தொடர்ந்தால் 23,825ல் சப்போர்ட் கிடைக்க வாய்ப்புள்ளது. இதையும் தாண்டினால் 23,680-ல் மட்டுமே நல்லதொரு சப்போர்ட் இருக்கிறது. தற்போதைய டெக்னிக்கல் சூழல்கள் நிப்டி பெரிய மாறுதல் இல்லாமல் இருக்கவோ அல்லது சிறிதளவு ஏற்றம் காண்பதற்கோ ஆதரவாகத்தான் இருக்கிறது.
ஆதரவு 23,835 23,760 23,675
தடுப்பு 24,050 24,175 24,250
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சுய விருப்பத்துடன் கையெழுத்திட்டு தரும் ராஜினாமா கடிதத்தை ஏற்பதே என் கடமை: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் விளக்கம்
-
அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., இசக்கி சுப்பையா ராஜினாமா
-
செங்கல் சூளையில் மாமூல் கேட்ட த.வெ.க., நிர்வாகி நீக்கம்
-
'பாலியல் குற்றவாளிகளின் மரண தண்டனையை மக்கள் முன் நிறைவேற்றலாம்'
-
முதல்வர் விஜய் இன்று டில்லி பயணம்; பரபரக்கும் அரசியல் களம்
-
'கேட்' தேர்வு மதிப்பெண்கள் மூலம் விமானப்படை பணியில் சேரலாம்
Advertisement
Advertisement