26 கிராம விவசாயிகளை சந்தித்த நிகில் குமாரசாமி
ராம்நகர்: பிடதியில், டவுன்ஷிப் திட்டத்தை எதிர்த்து வரும், ம.ஜ.த., கட்சியின் இளைஞர் அணி தலைவர் நிகில் குமாரசாமி, நேற்று, 26 கிராமங்களுக்கு சென்று விவசாயிகளை சந்தித்தார்.
பெங்களூரு தெற்கு மாவட்டம், பிடதி தாலுகாவில் உள்ள பைரமங்கலா கிராமத்தில் நேற்று அவர் அளித்த பேட்டி:
விவசாயிகள் பிரச்னையில் அரசியலுக்கு இடமில்லை. இது, விவசாயிகளின் வாழ்வாதார பிரச்னை. நாங்கள் விவசாயிகளுடன் போராடுகிறோம். பிடதி டவுன் ஷிப் திட்டம், விவசாயிகளை அழித்துவிடும்.
இத்திட்டத்தை காங்கிரஸ் தலைவர் கவுரவ பிரச்னையாக கருதுகின்றனர். இத்திட்டம் விவசாயிகளுக்கு அநீதியாக அமையும். தங்களின் பரம்பரை சொத்துகளை தக்க வைத்து கொள்வது விவசாயிகளின் உரிமை.
விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு, 435 நாட்களாகி விட்டன. மாவட்டத்தின் மகன் என்று கூறும் சிவகுமார், ஏன் இவர்களை இன்னும் சந்திக்காதது ஏன்... உள்ளூர் எம்.எல்.ஏ.,க்கள் ஏன் விவசாயிகளின் பிரச்னையை கேட்கவில்லை?
நாங்கள் இந்த மாவட்டத்தில் பிறக்கவில்லை என்றாலும், எங்கள் உணர்வுகள் இம்மாவட்டத்தில் மறைந்துள்ளன.
சிவகுமார் அடுத்த முதல்வர் விஷயத்தில் கருத்து கூற விரும்பவில்லை. 136 இடங்களில் வென்று காங்கிரஸ் மிகப்பெரிய பெரும்பான்மை கட்சியாக உருவெடுத்து உள்ளது.
காங்கிரசார் தான் அரசை வழிநடத்துகின்றனர். இங்கு யார் முதல்வர் அல்லது துணை முதல்வர் என்று எனக்கு தெரியாது. இது அவர்களின் கட்சிக்கு உட்பட்ட விஷயம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
பத்மஸ்ரீ சிலம்பாட்ட கலைஞருக்கு பாராட்டு பட விளக்கம்
-
பாரம்பரிய நாடகக் கலையில் கல்விசார் தெருக்கூத்து பயிற்சி
-
அ.தி.மு.க., செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம்
-
போட்டோ ஏ.டி.வி.டி., எஸ்., பக்கத்திற்கு... 25க்கு 3 அ.தி.மு.க., நிர்வாகிகள் 100 பேர் த.வெ.க.,வில் ஐக்கியம்
-
தற்கொலை செய்ய பீச்சுக்கு வந்த பெண் போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைப்பு
-
போலீஸ் செய்திகள்