பிரசன்னயோக ஆஞ்சநேய பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை

குரோம்பேட்டை, மே 29-

குரோம்பேட்டை, நேரு நகர் பிரசன்ன யோக ஆஞ்சநேயர் பெருமாள் கோவில் மகா கும்பாபிஷேகம் நேற்று விமரிசையாக நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

சென்னை, குரோம்பேட்டை, நேரு நகரில் உள்ளது பிரசன்ன யோக ஆஞ்சநேயர் சுவாமி கோவில். அங்கு, அலர்மேல் மங்கை சமேத பிரசன்ன வெங்கடேசப் பெருமாள், லட்சுமி நரசிம்மர், லட்சுமி ஹயக்கிரீவருடன் பிரசன்ன யோக ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார்.

அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில், சில மாதமாக திருப்பணிகள் நடந்தன. பணிகள் முடிந்து கும்பாபிஷேக ஏற்படுகள் நடந்தன.

இம்மாதம் 26ம் தேதி முதல் யாகசாலை வளர்க்கப்பட்டு, ஹோமங்கள், கால பூஜைகள் நடத்தப்பட்டன. கும்பாபிஷேக நாளான நேற்று அதிகாலை சுப்ரபாதம், அதை தொடர்ந்து விஸ்வரூப தரிசனம் நடந்தது.

பின், ேஹாமம் ஆரம்பிக்கப்பட்டு, கும்ப ஆராதனம் நடந்தது. காலை 7:30 மணிக்கு கடப்பறப்பாடு நடந்தது.

தொடர்ந்து, காலை 8:15 மணிக்கு விமான கோபுரத்திற்கு கும்பநீர் சேர்க்கப்பட்டு, மகா கும்பாபிஷேகம் நடந்தது. பின், மகா அவர்நிவேதனம், சாற்றுமுறை, பிரசாத வினியோகம் நடந்தது.

பின், பொதுமக்களுக்கு மூலவர் அருள்பாலித்தார். நேற்று மாலை, ஸ்ரீனிவாச திருக்கல்யாணம் நடந்தது. அதை தொடர்ந்த சுவாமி திருவீதி உலா புறப்பாடு நடந்தது. இவ்வைபத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

***

Advertisement