கூட்டுறவு வங்கிகளுக்கு வரித்துறை ஆலோசனை
கோவை: தமிழகம் மற்றும் புதுச்சேரி வருமான வரி இயக்குநரகம் சார்பில், கோவையில் உள்ள கூட்டுறவு வங்கிகள் மற்றும் துணைப் பதிவாளர் அலுவலகங்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
புலனாய்வு மற்றும் குற்றப் புலனாய்வு பிரிவு சார்பில் நடந்த நிகழ்வில், கூட்டுறவு வங்கிகள், துணைப் பதிவாளர் அலுவலகங்கள், சரியான நேரத்தில் நிதிப் பரிவர்த்தனை அறிக்கைகளை (எஸ்.எப்.டி.,) தாக்கல் செய்வது, பிழையின்றி தாக்கல் செய்வது குறித்து விளக்கப்பட்டது.
கோவை, வருமான வரி அதிகாரி (புலனாய்வு, குற்றப்புலனாய்வு) சுசீலா பிரகாஷ், நிதிப் பரிவர்த்தனை அறிக்கைகளை சரியான நேரத்தில் தாக்கல் செய்வதன் முக்கியத்துவம், அறிக்கை அளிக்கும் நிறுவனங்கள் இணங்காததன் விளைவுகளை விளக்கினார்.
வருமான வரி அதிகாரி முத்துராமன், நிதிப் பரிவர்த்தனை அறிக்கைகளில் பொதுவாக செய்யப்படும் தவறுகளை சுட்டிக் காட்டினார். கூட்டுறவு வங்கிகள் மற்றும் துணைப் பதிவாளர் அலுவலக அதிகாரிகள் பங்கேற்றனர்.
மேலும்
-
பத்மஸ்ரீ சிலம்பாட்ட கலைஞருக்கு பாராட்டு பட விளக்கம்
-
பாரம்பரிய நாடகக் கலையில் கல்விசார் தெருக்கூத்து பயிற்சி
-
அ.தி.மு.க., செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம்
-
போட்டோ ஏ.டி.வி.டி., எஸ்., பக்கத்திற்கு... 25க்கு 3 அ.தி.மு.க., நிர்வாகிகள் 100 பேர் த.வெ.க.,வில் ஐக்கியம்
-
தற்கொலை செய்ய பீச்சுக்கு வந்த பெண் போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைப்பு
-
போலீஸ் செய்திகள்