சி.டி.சி.ஏ. போட்டி ‘சதம்’ அடித்த பரத்

கோவை, மே 29–

கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம்(சி.டி.சி.ஏ.) சார்பில் இரண்டாவது டிவிஷன் போட்டி பி.எஸ்.ஜி., ஐ.எம்.எஸ். மைதானங்களில் நடக்கிறது. விஜய் கிரிக்கெட் கிளப் அணியினர் 50 ஓவரில் 224 ரன் எடுத்தனர்; பரத் 100 ரன் எடுத்தார். எதிரணியின் நவீன்குமார் ஐந்து விக்கெட் வீழ்த்தினார். ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி அணியினர் 42.1 ஓவரில் 228 ரன் எடுத்து வெற்றி பெற்றனர். அணியின் விஷ்ணு பிரபு 82, நதீர் 41, ஹரிஷ் ராகவ் 36 ரன் எடுத்தனர்.

Advertisement