வெயிலுகந்தம்மன் கோயில் தேரோட்டம்

விருதுநகர், மே 29 -

விருதுநகர் வெயிலுகந்தம்மன் கோயிலில் வைகாசி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு நடந்த தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

விருதுநகர் வெயிலுகந்தம்மன் கோயிலில் வைகாசி பொங்கல் திருவிழா மே 19ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் அம்மன் நகர்வலம் நடந்தது.

வைகாசி பொங்கல் திருவிழாவில் திரளான பக்தர்கள் அம்மனுக்கு பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

நேற்று முன்தினம் நடந்த கயிறுகுத்து, அக்னிசட்டி ஏந்துதல், கரகம் எடுத்தல், ரதம் இழுத்தல், உருமாறி பல வேடங்கள் அணிந்து வருதல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை பக்தர்கள் நிறைவேற்றினர். மேலும் நேற்று மாலை நடந்த தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேரை இழுத்தனர். ஏற்பாடுகளை ஹிந்து நாடார்கள் தேவஸ்தானத்தினர் செய்தனர்.   

Advertisement