4 மாநிலங்களில் புதிய தலைவர்களை நியமித்தது பா.ஜ.,

புதுடில்லி: டில்லி, பஞ்சாப், ஹரியானா, திரிபுரா ஆகிய நான்கு மாநிலங்களுக்கான புதிய தலைவர்களை, பா.ஜ., தலைமை நேற்று அறிவித்தது.

இதுகுறித்து அக்கட்சியின் தேசிய பொதுச்செயலர் அருண் சிங் வெளியிட்ட அறிக்கை:

டில்லி பா.ஜ., தலைவராக, மத்திய இணை அமைச்சரும் லோக்சபா எம்.பி.,யுமான ஹர்ஷ் மல்ஹோத்ரா நியமிக்கப்பட்டுள்ளார். ஹரியானா மாநிலத்தின் தற்போதைய மாநில செயலராக உள்ள அர்ச்சனா குப்தா புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள பஞ்சாப் மாநிலத்தில், கேவல் சிங் தில்லான், மாநில தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, காங்கிரசில் இருந்த இவர், 2022ல் பா.ஜ.,வில் இணைந்தார்.

இதேபோல் திரிபுரா மாநில தலைவராக அபிஷேக் தேப்ராய், தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த நியமனங்கள் அனைத்தும் உடனடியாக அமலுக்கு வருகின்றன.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement