ரயில் தண்டவாள மேம்பாட்டு பணி :6 விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம்

சென்னை: ரயில் பாதை மேம்பாட்டு பணி காரணமாக, வைகை உட்பட ஆறு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை:

சென்னை ரயில் கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில், இந்த மாதத்தில் பல்வேறு இடங்களில் மேம்பாட்டு பணிகள் நடக்கின்றன. இதனால், சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

★ எழும்பூர் - மதுரை 'வைகை' விரைவு ரயில் நாளை ஒரு மணிநேரமாக தாமதமாக செல்லும்

★ திருச்சி - ராஜஸ்தான் மாநிலம் 'பகத் கி கோதி' விரைவு ரயில், நாளை ஒரு மணிநேரம் 30 நிமிடங்கள் தாமதமாக செல்லும்.

★ மேற்கு வங்க மாநிலம் ஹவுரா - சென்னை சென்ட்ரல் மெயில் நாளை, 9, 13, 16, 18, 21ம் தேதிகளில் 50 நிமிடங்கள் தாமதமாக செல்லும்

★ ஹவுரா - சென்னை சென்ட்ரல் ரயில், வரும் 23ம் தேதி 55 நிமிடங்கள் தாமதமாக செல்லும்

★ காட்பாடி - திருப்பதி குறுகிய துார ரயில் வரும் 23ம் தேதி 35 நிமிடங்கள் தாமதமாக செல்லும்

★ மேற்கு வங்க மாநிலம் ஷாலிமர் - கேரள மாநிலம் திருவனந்தபுரம் விரைவு ரயில், வரும் 9, 16, 23ம் தேதிகளில் 55 நிமிடங்கள் தாமதமாக செல்லும்

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement