தலைகாட்ட முடியலை!
'தோல்வியையாவது தாங்கிக் கொள்ளலாம்; அடி உதை விழுவதைத் தான் தாங்க முடியவில்லை...' என கண்ணீர் வடிக்கிறார், மேற்கு வங்க முன்னாள் முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி.
மேற்கு வங்கத்தில், சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அந்த கட்சியின் மூத்த தலைவரான சுவேந்து அதிகாரி, முதல்வராக பதவியேற்றார்.
அங்கு, மூன்று முறை தொடர்ந்து முதல்வராக பதவி வகித்த மம்தா பானர்ஜியின் கட்சி படுதோல்வி அடைந்தது. பவானிபூர் தொகுதியில் மம்தாவே தோல்வி அடைந்தார். இந்த தோல்வியை மறப்பதற்குள், அடுத்தடுத்த அதிர்ச்சிகரமான சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
மம்தாவின் உறவினரும், திரிணமுல் கட்சி எம்.பி.,யுமான அபிஷேக் பானர்ஜி, சோனார்பூர் தொகுதியில் உள்ள கட்சி நிர்வாகி வீட்டுக்கு சமீபத்தில் சென்றபோது, அவரை மர்ம நபர்கள் சிலர் சரமாரியாக தாக்கினர்.
அடுத்த நாளே, திரிணமுல் காங்கிரசின் மற்றொரு எம்.பி.,யான கல்யாண் பானர்ஜி மீது ஹூக்ளி நகரில் தாக்குதல் நடந்தது. இந்த தாக்குதல்களை பா.ஜ.,வினர் நடத்தியதாக, திரிணமுல் கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர்.
பா.ஜ.,வினரோ, 'எங்களுக்கும், இந்த தாக்குதலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. திரிணமுல் கட்சியினர் மீதுள்ள வெறுப்பால், பொதுமக்களே, அவர்களை தாக்கியுள்ளனர்...' என்கின்றனர்.
இதனால், 'இன்னும் சில மாதங்களுக்கு வெளியில் தலைகாட்டாமல் இருப்பது தான் நல்லது...' என புலம்புகிறார், மம்தா பானர்ஜி.
மேலும்
-
தமிழகத்தில் அடுத்து நடக்கும் பொதுத்தேர்தலில் நமது கட்சி போட்டியிடும்; அண்ணாமலை அறிவிப்பு
-
பிரவீன் சக்கரவர்த்தியின் பதிவு அதிகப் பிரசங்கித்தனம்: மார்க்சிஸ்ட் கண்டனம்
-
மணிப்பூரில் மீண்டும் வன்முறை: கணவன், மனைவி உட்பட 3 பேர் சுட்டுக்கொலை
-
அண்ணாமலை ராஜினாமா; பாஜ ஏற்பு
-
ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை; 5.25 சதவீதமாக நீடிக்கும் என அறிவிப்பு
-
முதல் அமைச்சரவை கூட்டம்; 436 திட்டங்களை வழங்கிய முதல்வர் விஜய்!