தேனி ரயில்வே ஸ்டேஷனில் சேதமடைந்த தேசிய கொடி

தேனி:தேனி ரயில்வே ஸ்டேஷன் முன் உள்ள 40 அடி உயர கம்பத்தில் தேசிய கொடி சேதமடைந்த நிலையில் பறக்கிறது.

தேனி ரயில்வே ஸ்டேஷனில் 2022 புதிதாத அமைக்கப்பட்ட கம்பத்தில் தேசிய கொடி பறக்கவிடப்பட்டது. தேசிய கொடியை முறையாக ரயில்வே அதிகாரிகள் பராமரிக்கவில்லை. இதனால் கொடியின் வண்ணம் தேய்ந்து, ஆங்காங்கே கிழிந்து தொங்குகிறது. இதுபற்றி ரயில் பயணிகள் கூறுகையில், 'தேனி ரயில்வே ஸ்டேஷனில் தேசிய கொடி கிழிந்த நிலையில் உள்ளது. அதை மாற்றாமல் அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர். ரயில்வே ஸ்டேஷன்களில் வழக்கமாக 6 மாதம் முதல் ஓராண்டுக்கு ஒரு முறை தேசிய கொடிகளை மாற்ற வேண்டும். காற்று, மழை பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் 3 முதல் 6 மாதங்களுக்குள் கொடியை மாற்ற வேண்டும். ஆனால் தேனி ஸ்டேஷன் மாஸ்டர் தேசிய கொடியை முறையாக பராமரிக்கவில்லை. சேதமடைந்த கொடியை மாற்றி புதிய தேசிய கொடி ஏற்ற வேண்டும்,' என்றனர்.

Advertisement