ஆதிதிராவிட இளைஞர்களுக்கு இலவச அழகு கலை பயிற்சி

செங்கல்பட்டு:ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு, அழகு கலை மற்றும் சிகை அலங்கார பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.

செங்கல்பட்டு கலெக்டர் டாக்டர் வீரப்பன் வெளியிட்ட அறிக்கை:

'தாட்கோ' வாயிலாக, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சமூகத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு, அழகு கலை மற்றும் சிகை அலங்கார பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.

இதற்கு பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற 18 முதல் 35 வயதிற்கு உட்பட்ட இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்.

இதில் பங்கேற்போருக்கு திருச்சி மாவட்டத்தில் 45 நாட்கள் பயிற்சி அளிக்கப்படும்.

பயிற்சிக்கான செலவின தொகையை, தாட்கோ ஏற்று கொள்ளும். பயிற்சியில் சேர விரும்புவோர் www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement