அய்யப்பன் கோவிலுக்கு பூமி பூஜை
ஆவடி: பட்டாபிராமில், புதிதாக அய்யப்பன் கோவில் கட்டுவதற்கு, பூமி பூஜை செய்யப்பட்டது.
ஆவடி அடுத்த பட்டாபிராம், பாரதியார் நகர், திலகர் தெருவில், அய்யப்பன் பக்தர்கள் அறக்கட்டளை சார்பில், ஸ்ரீஅய்யப்பனுக்கு, 18 படிகளுடன் கோவில் கட்ட, நேற்று பூமி பூஜை நடந்தது.
இதற்கான பணிகள், காலை 5:30 மணிக்கு கோ பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து, கணபதி ஹோமம், பூமி சுத்தி பூஜை, நாக பூஜை, அஸ்வத பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது.
காலை 10:30 மணியளவில், கேரளா சபரிமலை மேல் சாந்தி மது நம்பூதிரி தலைமையில், பூமி பூஜை நடந்தது. மதியம் அன்னதானம், மாலை திருவிளக்கு பூஜை மற்றும் இன்னிசை கச்சேரி நடந்தது.
நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement