துரோகம் செய்த காங்கிரஸ்; இண்டி கூட்டணி கூட்டத்தை புறக்கணிப்பதாக திமுக அறிவிப்பு
சென்னை: காங்கிரஸ் பங்கேற்கும் இண்டி கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என்று திமுக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில்; டில்லி 'கான்ஸ்டிடியூஷன் கிளப்பில்' வரும் ஜூன் 8ம் தேதி நடைபெறும் இண்டி கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்திற்கு வருமாறு திமுகவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இண்டி கூட்டணி தொடங்கியதிலிருந்து அக்கூட்டணியின் மையச் சக்தியாக திமுக இயங்கியது. கட்சி தலைவர் ஸ்டாலின் தான் நாட்டு மக்களுக்கான முக்கியப் பிரச்னைகளில் முதன்மைக் குரல் எழுப்பி வந்தார். இது இண்டி கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளும் அக்கூட்டசிகளின் தலைவர்களும் நன்கு அறிவார்கள்.
தமிழகத்தில் நடைபெற்ற சட்டசபை பொதுத்தேர்தலுக்குப் பின், காங்கிரஸ் கட்சி, திமுகவிற்கு இழைத்த துரோகத்தினால் மிகுந்த மனக்காயமுற்றிருக்கும் கட்சித் தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கின்ற வகையில், வருகின்ற ஜூன் 8ம் தேதி டில்லியில் நடைபெறும் இண்டி கூட்டணிக் கூட்டத்தில், அதாவது காங்கிரஸ் பங்கேற்கும் கூட்டத்தில் திமுக பங்கேற்காது.
இக்கூட்டத்தில் பங்கேற்காத அதேநேரத்தில், இந்தக் கூட்டத்தில் இடம்பெற்றுள்ள மற்ற கட்சிகள் முன்வைக்கும் நாட்டு நலனைப் பாதிக்கும் பிரச்னைகளில், திமுக என்றைக்கும் குரல் கொடுக்கும், இவ்வாறு அவர் கூறினார்.
பிரத்யேக வீடியோ!
கூட்டத்தை புறக்கணித்தது திமுக; இண்டி கூட்டணியில் மிகப்பெரிய பிளவு குறித்து தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
ஆக கூடிய சீக்கிரத்தில் காங்கிரஸ் மற்றும் திமுக காணாமல் போகும்.
துரோகம் செய்த காங்கிரஸ் ன்னு இருக்கு. துரோகத்துக்கு துரோகம் செய்த காங்கிரஸ் ன்னு இருக்கணும். முதல்ல துரோகம் செய்தது திருட்டு தீயமுக தான். களவாணிங்க அதைப் பத்தி பேச மாட்டானுங்க. தான் ரொம்ப யோக்கினுங்கன்னு பதவிசா பேசுவானுங்க. காங்கிரஸ் மேல் சவாரி பண்ணிட்டு முந்திரி பதவிங்களை இவனுங்களே ஆட்டைய போட்டுடுவானுங்க. காங்கிரஸ்காரனுங்களுக்கு நல்ல வெல்லமா பாத்து வாங்கிகுடுத்துடுவானுங்க.
பாஜக தயவில் வென்ற பிறகு, காங்கிரஸ் கூட்டணிக்கு உத்தவ் தாக்கரே தாவி முதல்வர் ஆனபோது எப்படி கொக்கரித்தது திமுக கும்பல்.
ஆட்சியில் இருக்கும்போது, மத்தியிலிருந்து எந்த ரைடு வந்தாலும், தப்பித்துக்கொள்ளலாம். ஆனால் இப்ப கம்பி எண்ண வேண்டும் என்ற பயத்தில், டைட்டானிகலிருந்து பெருச்சாளி துள்ளிக்குதித்து ஓட்டம்.
சங்கர ஐயரை விட்டு பேட்டி கொடுக்க சொன்னபோதே புள்ளிக்கூட்டணியிலிருந்து திமுகவிற்கு கல்தா கொடுத்தாகிவிட்டதே. முதலமைச்சராக இருந்தபோது சரி இன்னும் இந்த ஆள் விவிரம் தெரிமால் பேசிக்கொண்டேருக்கிறார். யாராவது எடுத்து சொல்லுங்கப்பா .
உன்னை மக்கள் புறக்கணித்து விட்டார்கள் என்பதை முதலில் நீ நினைவிலே வைத்து கொள்ள வேண்டும்
அந்தோ பரிதாபம். சுடலையாண்டி நிலை...டெங்குவை விட கொடூரமாக தண்டிக்கப்படுகிறார்கள். ரொம்பவே பொருந்தும்...
துரை வைகோ ஆயிரம் சொல்வானாம், அடுத்த கட்சி சின்னத்தில் நிற்பது அவமானம் என்று. ஒரு ஒரு முறை சொல்லட்டும் நான் எம் பி பதவியையும், 2 எம் எல் ஏக்கள் அவர்கள் பதவியையும் ராஜினாமா செய்துவிட்டு, இனி வரும் தேர்தல்களை எங்கள் கட்சி தேர்தல் செலுவுகளை நாங்களே கவனித்து கொள்கிறோம் என்று. இந்த பட்டி ஜெயிக்க நேரு செலவழித்த பணம் கொஞ்சமா, நஞ்சமா.
டெங்கு எம் எல் எ பதவியை ராஜினாமா செய்துவிட்டு மறுபடியும் தேர்தலில் நிற்குமா ?
திமுக வை யாரும் கூப்பிடவில்லை?
டெல்லி இளவரசன் பிஜேபி ஆட்சி 1 வருடத்தில் வீழும் என்று ஆருடம் சொல்கிறார். ஆனால் திமுக 32 MP களுடன் புள்ளி கூட்டணியில் இருந்து வெளியேறுகிறது. என்னடா புள்ளி கூட்டணிக்கு வந்த சோதனை?