அம்பத்துார் தொழிற்பேட்டையில் சிறப்பு தொழில் கடன் முகாம்
திருவள்ளூர்:அம்பத்துார் தொழிற்பேட்டையில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான, சிறப்பு தொழில் கடன் முகாம் நடைபெறுகிறது.
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் வாயிலாக, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் மற்றும் சேவை நிறுவனங்களுக்கு, புதிய தொழிற்சாலைகள் மற்றும் சேவை நிறுவனங்களை அமைப்பதற்கும், தற்போது இயங்கி வரும் நிறுவனங்களை விரிவுபடுத்துவதற்கும், பல்வேறு சிறப்பு திட்டங்களின் கீழ் கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது.
திருவள்ளூர் மாவட்ட கிளை அலுவலகம், அம்பத்துார் தொழிற்பேட்டையில் இயங்கி வருகிறது. தற்போது, அந்த கிளை அலுவலகத்தில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் பயன்பெறும் வகையில், சிறப்பு தொழில் கடன் முகாம், ஜூன் 1ல் துவங்கி, வரும் 30ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த முகாமில் சமர்ப்பிக்கப்படும் பொதுக்கடன் விண்ணப்பங்களுக்கு, ஆய்வுக் கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படும். எனவே, புதிய தொழில் முனைவோரும் தொழிலதிபர்களும், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும் தகவல்களுக்கு, 94443 96845, 94450 23465, 044 - 2625 7664 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, கலெக்டர் கவிதா தெரிவித்துள்ளார்.