ஜே.இ.இ., அட்வான்ஸ்டு தேர்வில் மகரிஷி வித்யா மந்திர் பள்ளி சாதனை

சென்னை: ஜே.இ.இ., அட்வான்ஸ்டு நுழைவுத் தேர்வில், சேத்துப்பட்டு, மகரிஷி வித்யா மந்திர் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

நாடு முழுதும் உள்ள மத்திய உயர்கல்வி நிறுவனங்களான, ஐ.ஐ.டி.,க்களில் சேர, ஜே.இ.இ., அட்வான்ஸ்டு நுழைவுத் தேர்வில், தேர்ச்சி பெறுவது கட்டாயம்.

அந்த வகையில், நடப்பு கல்வியாண்டின் ஜே.இ.இ., அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள், சில நாட்களுக்கு முன் வெளியாகின. அதில், சென்னை சேத்துப்பட்டு பகுதியில் இயங்கி வரும், மகரிஷி வித்யா மந்திர் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

அந்த பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள், அகில இந்திய அளவில் முதன்மையான இடங்களை பிடித்துள்ளனர். அந்த வகையில், மாணவர் சூர்யா 114வது இடம்; சச்சித் ஜி 303வது இடம்; தர்ஷ் 391வது இடம் பிடித்துள்ளனர்.

சேத்துப்பட்டு மகரிஷி வித்யா மந்திர் பள்ளியைச் சேர்ந்த ஒன்பது மாணவர்கள், அகில இந்திய தரவரிசையில் முதல் 1,000 இடங்களுக்குள் வந்துள்ளனர்.

தவிர, 19 மாணவர்கள் 2,000; 33 மாணவர்கள் 5,000; 53 மாணவர்கள் 10,000; 75 மாணவர்கள் 20,000 இடங்களுக்குள் வந்துள்ளனர்.

மாணவர்களின் கடின உழைப்பு, ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு, பெற்றோரின் ஒத்துழைப்பு, பள்ளி நிர்வாகத்தின் வழிகாட்டுதல் ஆகியவற்றின் பலனாக, இந்த வெற்றி கிடைத்துள்ளதாக, பள்ளி நிர்வாகம் பெருமிதம் தெரிவித்துள்ளது.

Advertisement