குப்பைகளை தரம் பிரிக்க மக்களுக்கு விழிப்புணர்வு

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் ஒன்றியம் வேடந்தாங்கல் ஊராட்சியில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, குப்பைகளை தரம் பிரிப்பது தொடர்பாக அப்பகுதி மக்களுக்கு செய்முறை விளக்கங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

அப்போது சுற்றுச்சூழல் அதிகாரிகள் கூறியதாவது:

பச்சைநிற பக்கெட்டில் மக்கும் குப்பை மற்றும் ஈரக்கழிவுகளும், நீலநிற பக்கெட்டில்- மக்காத குப்பையும், உலர் கழிவுகளும், சிவப்பு நிற பக்கெட்டில் -சுகாதார கழிவுகளும், கருப்பு நிற பக்கெட்டில்- சிறப்பு கழிவுகளும் என நான்கு வகையாக வீடுகளில் இருந்து வரும் திடக்கழிவுகளை தரம் பிரித்து வழங்க வேண்டும்.

ஊராட்சியில் அனைத்து பொது இடங்கள், பள்ளிகள், பேருந்து நிலையங்கள் அரசு கட்டடங்களை பாதுகாப்பது நமது கடமை.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதையடுத்து அரசு அலுவலகங்கள், பொது இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

இந்நிகழ்வில் ஊராட்சி தலைவர் வேதாச்சலம், துணைத் தலைவர் கௌதமி, வட்டார ஒருங்கிணைப்பாளர் ரகுநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Advertisement