காலிறுதியில் இந்திய ஜோடி * இந்தோனேஷிய பாட்மின்டனில்...
ஜகார்த்தா: இந்தோனேஷிய ஓபன் பாட்மின்டன் காலிறுதிக்கு இந்திய ஜோடி முன்னேறியது.
இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவில் 'சூப்பர் 1000' சர்வதேச பாட்மின்டன் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றில் உலகின் 'நம்பர்-12' வீராங்கனை இந்தியாவின் சிந்து, 'நம்பர்-1' வீராங்கனை, தென் கொரியாவின் ஆன் சே யங்கை சந்தித்தார். 44 நிமிடம் நடந்த போட்டி முடிவில் சிந்து, 17-21, 15-21 என்ற நேர் செட்டில் தோல்வியடைந்தார்.
ஆண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி, 21-16, 13-21, 14-21 என ஹாங்காங்கின் லீ சியுக்கிடம் தோல்வியடைந்தார்.
ஆண்கள் இரட்டையர் காலிறுதியில் இந்தியாவின் ஹரிஹரன் அம்சகருணன், அர்ஜுன் ஜோடி, மலேசியாவின் காங் ஜிங், ஆரோன் ஜோடியை எதிர்கொண்டது. முதல் செட்டை 16-21 என இந்திய ஜோடி இழந்தது.
பின் சுதாரித்துக் கொண்ட இந்திய ஜோடி அடுத்த செட்டை 21-15 என வென்றது. மூன்றாவது, கடைசி செட் இழுபறியானது. முடிவில் 21-19 என வசப்படுத்தியது.
48 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் இந்திய ஜோடி 16-21, 21-15, 21-19 என வென்று, காலிறுதிக்கு முன்னேறியது.