இந்தியாவுக்கு இரண்டு தங்கம் * மல்யுத்த 'ரேங்கிங்' தொடரில்
உல்லன்பாட்டர்: மல்யுத்த ரேங்கிங்' தொடரில் இந்தியாவின் சுனில் குமார், நிதேஷ் தங்கம் வென்றனர்.
மங்கோலியாவின் உல்லன்பாட்டர் நகரில் சர்வதேச ரேங்கிங் மல்யுத்த தொடர் நடக்கிறது. முதலில் 'கிரிகோ ரோமன்' முறையில் போட்டிகள் நடந்தன. 97 கிலோ பிரிவில் இந்தியாவின் நிதேஷ் பங்கேற்றார். அரையிறுதியில் நிதேஷ், 4-1 என மங்கோலியாவின் கன்பாட்டரை வீழ்த்தினார். அடுத்து நடந்த பைனலில் நிதேஷ், கஜகஸ்தானின் நுராசில் அமனலியை 13-9 என வீழ்த்தில, தங்கப்பதக்கம் கைப்பற்றினார்.
87 கிலோ பிரிவில் இந்தியா சார்பில் சுனில் குமார் களமிறங்கினார். ஆசிய அளவில் 6 பதக்கம் வென்ற சுனில் குமார், அரையிறுதியில் வெனிசுலாவின் லுாயிஸ் எடுவார்டோவை 3-1 என வீழ்த்தினார்.
அடுத்து நடந்த பைனலில் சுனில் குமார், கிர்கிஸ்தானின் ஆசாத் சல்டினோவை எதிர்கொண்டார். இதில் சிறப்பாக செயல்பட்ட சுனில் குமார், 4-1 என வென்று, தங்கம் கைப்பற்றினார்.