ஓய்வூதியர் சங்க ஆண்டு விழா

காரைக்குடி, ஜூன் 25-



காரைக்குடியில் ஓய்வூதியர் சங்க ஆண்டு விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் நடந்தது. ஓய்வூதியர் சங்கத் தலைவர் அங்கமுத்து தலைமை ஏற்றார். துணைத் தலைவர் வால்டன் வரவேற்றார். செயலாளர் மோகன்தாஸ் ஆண்டறிக்கை வாசித்தார். கூட்டத்தில், 70 வயதுக்கு மேல் உள்ள ஓய்வூதியர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும், மருத்துவ காப்பீடு தற்போது உள்ள நிலையை மாற்றி தமிழக அரசு நேரடியாக மருத்துவ காப்பீட்டு திட்டத்தை நடத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Advertisement