நடனம் ஆடும்போது தகராறு தொழிலாளியை தாக்கிய இருவர் கைது
புதுச்சத்திரம்: திருமணத்தில் நடனம் ஆடும்போது ஏற்பட்ட தகராறில் கூலித் தொழிலாளியை தாக்கிய இருவரை, போலீசார் கைது செய்தனர்.
புதுச்சத்திரம் அடுத்த தீர்த்தனகிரியை சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் ஞானப்பிரகாஷ், 36; கூலித் தொழிலாளி. இவர் கடந்த 25ம் தேதி மேட்டுப்பாளையத்தில் நடந்த உறவினர் திருமணத்திற்கு சென்றார். அப்போது மண்டபத்தில் டான்ஸ் ஆடும்போது தகராறு ஏற்பட்டது. இதில் ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த ஜெயராமன் மகன் சந்தோஷ், 23; குமார் மகன் திருமாறன், 22; உள்ளிட்ட நான்கு பேர் சேர்ந்து ஞானபிரகாசை தாக்கினர். அதனை தட்டி கேட்ட ஞானபிரகாஷ் சகோதரர் மகள் சிவகாமியும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து ஞானபிரகாஷ் கொடுத்த புகாரின்பேரில், புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிந்து சந்தோஷ், திருமாறன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement