டூ - வீலர் கவிழ்ந்து வாலிபர் பலி

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் அருகே, இருசக்கர வாகனம் தடுமாறி கட்டுப்பாட்டை இழந்து, கவிழ்ந்ததில் வாலிபர் உயிரிழந்தார்.

மாமல்லபுரம் அடுத்த, நல்லான்பிள்ளைபெற்றாள் பகுதியைச் சேர்ந்தவர் விஷால், 20.

இவர் நேற்று முன்தினம் இரவு, 'கே.டி.எம்.,' இருசக்கர வாகனத்தில், நண்பரின் திருமணத்திற்கு திருக்கழுக்குன்றம் சென்றுள்ளார்.

பின் நள்ளிரவில், திருக்கழுக்குன்றம் அடுத்த, புலியூர் பகுதியில் வந்த போது, கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனம் சாலையோரம் கவிழ்ந்தது. இதில் துாக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த விஷால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

திருக்கழுக்குன்றம் போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.

Advertisement