டிஜிட்டல் மேனுபேக்சரிங் டெக்னாலஜி பாலிடெக்னிக்கில் மாணவர் சேர்க்கை
வனவாசி; வனவாசி அரசு பாலிடெக்னிக் முதல்வர் வரத-குரு அறிக்கை:
பாலிடெக்னிக்கில், 'டிஜிட்டல் மேனுபேக்சரிங் டெக்னாலஜி' பெயரில், 3 ஆண்டு பட்டயப்படிப்-புக்கு மாணவர் சேர்க்கை நடக்கிறது. படிக்கும்-போதே வருமானம் ஈட்டும் வாய்ப்பு என்ற திட்-டத்தில், ஓசூரில் இயங்கும் டாடா எலக்ட்-ரானிக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து, இப்பாடத்திட்டம் செயல்படுத்தப்படு-கிறது. மாணவர்கள் ஆண்டுக்கு, 3 மாதங்கள் கல்-லுாரி படிப்பு, 9 மாதங்கள் டாடா நிறுவனத்தில் தொழிற்பயிற்சி மேற்கொள்வர்.
சிறப்பு அம்சமாக, பாலிடெக்னிக்கில் படிக்கும், 3 மாதங்களுக்கு தலா, 4,000 ரூபாய், 9 மாதங்கள் தொழிற்பயிற்சி காலத்தில் மாதந்தோறும், 9,000 ரூபாய் பயிற்சி ஊக்கத்தொகை வழங்கப்படும். பட்டயப்படிப்பில் சேர பிளஸ் 2 தேர்ச்சி அல்லது 10ம் வகுப்பு முடித்து, இரு ஆண்டு ஐ.டி.ஐ., தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வரும், 30 வரை, www.tnpoly.in என்ற இணையதளம் மூலம் விண்-ணப்பிக்கலாம். பதிவு கட்டணம், 150 ரூபாயை, டெபிட், கிரடிட் கார்டுகள், நெட்பேங்கிங் மூலம் செலுத்தலாம். எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு, விண்ணப்ப பதிவு கட்டணம் இல்லை.விண்ணப்பித்து காத்திருக்கும்
மாணவர்களுக்கு அழைப்பு
ஆத்துார், ஜூன் 26
ஆத்துார், வடசென்னிமலை அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லுாரி முதல்வர் ரவீந்திரன் அறிக்கை:
முதலாமாண்டு மாணவர் சேர்க்கை, கடந்த, 8 முதல் நடக்கிறது. மாணவர்களின் விண்ணப்-பங்கள், ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகின்-றன. ஏற்கனவே விண்ணப்பித்து காத்திருப்பில் இருக்கும் மாணவர்கள், கல்லுாரிக்கு வந்து சேர்க்கை பெறலாம்.