ஜப்பான் பிரதமருடன் பிரதமர் மோடி பேச்சு
புதுடில்லி: இந்தியா வந்துள்ள ஜப்பான் பிரதமர் டகாய்ச்சியுடன், இரு தரப்பு உறவுகள் குறித்து டில்லியில் பிரதமர் மோடி பேச்சு நடத்தினார்.
பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று ஜப்பான் பிரதமர் டகாய்ச்சி இந்தியாவுக்கு 3 நாட்கள் பயணமாக வந்துள்ளார். இன்று அவருக்கு ஜனாதிபதி மாளிகையில் பாரம்பரிய அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. ஜனாதிபதி மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில், ஜப்பான் பிரதமர் டகாய்ச்சியும், பிரதமர் மோடியும் தங்கள் நாட்டின் அமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகளை ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து வைத்தனர்.
பிறகு ஜப்பான் பிரதமருடன், இரு தரப்பு உறவுகள் குறித்து மோடி பேச்சு நடத்தினார். டில்லியில் நடைபெறும் 16வது இந்தியா - ஜப்பான் ஆண்டு உச்சி மாநாட்டில் ஜப்பான் பிரதமர் பங்கேற்க உள்ளார். வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் உறவை விரிவுபடுத்துவது குறித்து இரு நாட்டு அமைச்சர்களும் பேச்சு நடத்த உள்ளனர்.
மிக குறைந்த வட்டியில் கடன் தரும் நாடு ஜப்பான் , சென்னையில் குடிநீர் கட்டமைப்பு கழிவு நீர் ட்ரெயினேஜ் சிஸ்டம் 1970ம் ஆண்டிலிருந்து மேம்படுத்தப்படவில்லை. இப்போதைய அரசாங்கம் லஞ்சம் வாங்காமல் இந்த வேலைகளை ஜப்பான் கடனை வாங்கி செய்யலாம் .. அதிமுகவிலிருந்து ஆழ்பொடிக்கும் வேலையே நிறுத்திவிட்டு ஜப்பான் பிரதமரை சந்தித்திருக்கலாம் அல்லது சென்னைக்கு அழைத்து பேச்சு நடத்தலாம்