செம்மண் நிலத்தில் கருடன் சம்பா நெல் சாகுபடி
செம்மண் நிலத்தில், கருடன் சம்பா நெல் சாகுபடி குறித்து, செங்கல்பட்டு மாவட்டம், பவுஞ்சூர் ஒன்றியம், நீலமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த நீலபூ.கங்காதரன் கூறியதாவது:
பாரம்பரிய ரக நெல்லில், வறட்சியில் தாங்கி வளரக்கூடியது கருடன் சம்பா ரக நெல். இது, 145 நாட்களில் விளையும். இந்த நெல் சிவப்பு நிறத்திலும், அரிசி வெள்ளை நிறத்திலும் இருக்கும்.
ரசாயன உரங்களை பயன்படுத்தி கருடன் சம்பா நெல் சாகுபடி செய்யும் போது, 35 மூட்டைகள் நெல் மகசூல் பெறலாம். நான் இயற்கை உரங்களை பயன்படுத்தி ஒரு ஏக்கர் செம்மண் நிலத்தில் சாகுபடி செய்துள்ளேன். மகசூல் அறுவடையில், 15 நெல் மூட்டைகள் வரை மகசூல் கிடைத்தது.
இதை, அரிசியாக மாற்றி விற்பனை செய்யும் போது, ரசாயன உரங்களை பயன்படுத்தி சாகுபடி செய்யும் நெல் மூட்டைகளில் கிடைக்கும் வருவாய் விட கூடுதலாக கிடைக்கிறது.
இந்த அரிசியில், அதிக சத்துக்கள் நிறைந்து இருப்பதால், உடலில் தீமை செய்யும் கொழுப்பை கரைக்கும் தன்மை உடையது.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு:
- -நீலபூ.கங்காதரன்,
96551 56968.