அரசு பஸ் மோதி முதியவர் காயம் 

சேத்தியாத்தோப்பு: அரசு பஸ் மோதி முதியவர் படுகாயம் அடைந்தார்.

சேத்தியாத்தோப்பு அருகே குமாரக்குடியில் பைபாஸ் சாலை, உயர்மட்ட பாலத்தின் கீழ் அதே பகுதியை சேர்ந்த பழனி 60; முதியவர் நேற்று முன்தினம் மாலை சாலையை கடந்தார்.

அப்போது ஸ்ரீமுஷ்ணத்தில் இருந்து சிதம்பரம் நோக்கி சென்ற அரசு டவுன் பஸ் பின்பக்க டயர் பழனி மீது மோதியது.

உயிருக்கு போராடியவரை  அங்கிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸில் ஏற்றி சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

சேத்தியாத்தோப்பு போலீசார் விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.

 

Advertisement