இறந்தவரின் கண்கள் அரசுமருத்துவமனைக்கு தானம்
விருதுநகர், ஜூலை 15 -
காரியாபட்டி அருகே கல்குறிச்சியை சேர்ந்த சரவணன் 56, நேற்று காலை இறந்தார். இவரின் கண்கள் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.
கல்குறிச்சி கே.கே., நகரைச் சேர்ந்தவர் சரவணன். இவர் நேற்று காலை வீட்டில் இறந்தார். இவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது.
இறந்த 6 மணி நேரத்திற்குள் கண்தானம் செய்ய முடியும் என்பதால் உறவினர்கள் சம்மதத்துடன் சரவணின் கண்கள் டீன் ஜெயசிங் தலைமையிலான மருத்துவக்குழுவினரால் தானமாக பெறப்பட்டது.
இக்கண்கள் தற்போது மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையின் கண்தானம் வங்கியில் வைக்கப்பட்டுள்ளது. விருதுநகர் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு தேவைப்படும் போது பயன்படுத்தப்படும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
புதுச்சேரிக்கு பிரான்ஸ் நாட்டில் இருந்து விமான சேவை துவங்க நடவடிக்கை :கவர்னர் தகவல்
-
ஊசுடு தொகுதியில் எம்.எல்.ஏ., உதவிகள் வழங்கல்
-
புதுச்சேரியில் பிரெஞ்சு தேசிய தினம் கொண்டாட்டம்
-
தொடர் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது 6 பைக்குகள் பறிமுதல்
-
காலியிடங்கள் அதிகரிப்பு நர்ஸ்கள் போராட்டம்
-
மக்கள் தொகை கணக்கெடுப்பு முன்னேற்பாடு கூட்டம்
Advertisement
Advertisement