திருப்போரூர் பேரூராட்சியில் 200 மரக்கன்றுகள் நடவு

திருப்போரூர்;திருப்போரூர் பேரூராட்சியில், நகர்ப்புற பசுமையாக்கம் திட்டத்தின் கீழ் 200 மரக்கன்றுகள் நடும் பணி நேற்று நடந்தது.

தமிழகத்தில் அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் பசுமை பரப்பை அதிகரிக்க மரங்கள் வளர்ப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில், திருப்போரூர் பேரூராட்சி சார்பில் நகர்ப்புற பசுமையாக்கம் திட்டத்தின் கீழ், இள்ளலுார், கண்ணகப்பட்டில் உள்ள பூங்கா வளாகத்தில், மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

இதில், பேரூராட்சி செயல் அலுவலர் சங்கீதா, 6வது வார்டு கவுன்சிலர் லோகநாதன், தூய்மை அலுவலர் ரகுபதி, சுகாதார மேற்பார்வையாளர் தினேஷ், பேரூராட்சி பணியாளர்கள் இணைந்து 200 மரக்கன்றுகளை நட்டனர்.

பேரூராட்சி செயல் அலுவலர் சங்கீதா கூறியதாவது:

இந்தாண்டு 15,000 மரக்கன்றுகளை நட திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரை பூங்கா, பொது இடம் உள்ளிட்ட பகுதிகளில் மரக்கன்றுகள் நடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இதுவரை, 1,000க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement