திருப்புத்துாரில் ஆவின் பால் தட்டுப்பாடு

திருப்புத்துார்:திருப்புத்துாரில் ஆவின் பால் சப்ளையை அதிகரிக்க பொதுமக்கள் கோரியுள்ளனர்.

திருப்புத்துார் நகரில் பரவலாக உள்ள ஆவின் பூத்களில் பகல் முழுவதும் பால் விற்பனை நடைபெறும். தற்போது சில நாட்களாக பகலில் பூத்கள் மூடப்பட்டு கிடக்கிறது. காரணம் முகவர்கள் கேட்கும் அளவிற்கு பால் விநியோகம் இல்லாததால் மூடுவதாக முகவர்கள் கூறுகின்றனர். தனியார் பால் விலை அதிகரித்துள்ள நிலையில், ஆவின் பால் பற்றாக்குறையால் பொதுமக்கள் கூடுதல் விலைக்கு வேறு நிறுவனத்தின் பாலை வாங்க வேண்டியுள்ளது.

மேலும் வீடுகளில் குழந்தைகளுக்கு பெரும்பாலும் ஆவின் பாலைத் தான் கொடுக்கின்றனர். இவர்களும் ஆவின் பால் கிடைக்காத போது குழந்தைகளுக்கு வேறு பால் தருவதால் உடல் நலம் பாதிப்பதாக கூறுகின்றனர்.

Advertisement