தமிழகத்தில் 'ரெஸ்டோ பார்': அனுமதிக்க அரசு பரிசீலனை

4

சென்னை: தமிழகத்தில், 'ரெஸ்டோ பார்' எனப்படும் உணவகத்துடன் கூடிய மதுக்கூடங்களை அனுமதிப்பது குறித்து, 'டாஸ்மாக்' நிர்வாகம் பரிசீலித்து வருகிறது.

தமிழக அரசின், 'டாஸ்மாக்' நிறுவனம், சில்லரை கடைகள் வாயிலாக மதுபான வகைகளை விற்கிறது.

இந்த கடைகளை ஒட்டிய காலியிடத்தில், 'பார்' எனப்படும் மதுக்கூடங்கள் நடத்த தனியாருக்கு உரிமம் வழங்கப்படுகிறது. இதற்கு, கட்டணம் செலுத்த வேண்டும்.

இது தவிர, கிளப்கள், நட்சத்திர ஹோட்டல்களில் உள்ள மதுக்கூடங்களில் மது விற்க, தனியாருக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில், 'ரெஸ்டோ பார்' எனப்படு ம் உணவகத்துடன் கூடிய மதுக்கூடங்கள் உள்ளன.

இதேபோல, தமிழகத்தில் ரெஸ்டோ பார்களை அனுமதிப்பது குறித்து, டாஸ்மாக் நிர்வாகம் பரிசீலித்து வருகிறது.

இந்த மதுக்கூடங்களுக்கு சிறப்பு வரி விதிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

இதுகுறித்து, டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறிய தாவது:

மதுக்கடைகளில் உள்ள மதுக்கூடங்களில் பல்வேறு முறைகேடு நடக்கின்றன. இதனால், அரசுக்கு வர வேண்டிய வருவாய், தனியாருக்கு செல்கிறது.

இதைத்தடுக்க நட வடிக்கை எடுத்தால், அரசு தவறான முடிவை எடுப்பது போன்ற தோற்றத்தை ஏ ற்படுத்துகின்றனர். ரெஸ்டோ பார் என்பது, முன்னணி உணவகங்களின் வளாகத்திலேயே, ஒரு பகுதியில் மதுக்கூடமும் இருக்கும். அதை, அந்த உணவகமே பராமரிக்கும்.

அங்கு வி ற்கப்படும் மது வகைகளை, டாஸ்மாக் வழங்கும். உணவகங்களில் உணவு தரமாக இருப்பதுடன், கழிப்பறை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement