அரப்பளீஸ்வரர் கோவிலில் வரும் 31ல் கொடியேற்றம்
சேந்தமங்கலம்:கொல்லிமலையில்,
3,000 ஆண்டு பழமையான அரப்பளீஸ்வரர் உடனுறை அறம் வளர்த்த நாயகி
கோவில் அமைந்துள்ளது. கொல்லிமலைக்கு வரும் பக்தர்கள்
அரப்பளீஸ்வரரை வழிபட்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இக்கோவிலில் ஆண்டுதோறும், ஆடி, 18ல் ஆடிப்பெருக்கு விழா மிகவும்
சிறப்பாக நடைபெறும்.
இந்தாண்டுக்கான ஆடிப் பெருக்கு
விழாவையொட்டி, வரும், 31 காலை, 9:50 மணி முதல், 10:25 மணி வரை கோவில்
கொடி மரத்தில் கொடியேற்றம் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து, காலை, மாலை
வேளைகளில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், உற்சவர் திருவீதியுலா
நடைபெறும்.
ஆக., 1, 2ல் சுவாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு
அபிஷேகம், அலங்காரம் மற்றும் சுவாமி திருவீதியுலா உள்ளிட்ட
நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. ஆக., 2 இரவு திருக்கல்யாண உற்சவம்
நடைபெற உள்ளது. ஆக., 3ல் ஆடிப்பெருக்கு நாளன்று கோவில் நிர்வாகம்
சார்பில், அதிகாலை, 5:00 மணிக்கு சுவாமி குதிரை வாகனத்தில்
திருவீதியுலா வரும். மதியம், 2:00 மணிக்கு சோமாஸ்கந்தர் பல்லக்கில்
வலம் வந்து, தீர்த்தவாரி உள்ளிட்ட நிகழ்ச்சி நடைபெறும்.
ஆக., 4
காலை, 8:45 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெறும்.
மாலை, 3:30 மணிக்கு வசந்த உற்சவ அபிஷேகத்துடன் திருவிழா
நிறைவடையும். விழா ஏற்பாடுகளை அரப்பளீஸ்வரர் கோவில்
நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
மேலும்
-
எரிசக்தி பாதுகாப்பை இனி சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது; ஜெய்சங்கர்
-
அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகள்; 2 ஆண்டுக்கு பிறகு புதிய வரி அறிவித்தார் டிரம்ப்
-
காட்சில்லா Vs காங் படத்தின் 18 வயது இளம் நடிகை விபத்தில் மரணம்; அதிர்ச்சியில் ஹாலிவுட்
-
பிரான்சில் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை
-
எம்.ஜி., 'அடாப்ட்' ஒரே உற்பத்தி தளத்தில் நான்கு கார்கள்
-
'எப்.ஜி., ப்ளூ பிளக்ஸ்' யமஹாவின் முதல் 'இ85' பைக்