பிரான்சில் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை

1



நமது நிருபர்




15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடைசெய்யும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டத்திற்கு பிரான்ஸ் ஒப்புதல் அளித்துள்ளது.

இன்ஸ்டாகிராம், டிக்டாக், ஸ்னாப்சாட், பேஸ்புக்' உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மற்றும் பிற டிஜிட்டல் தளங்களால் சிறார்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக ஐரோப்பிய நாடான பிரான்சின் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தெரிவித்து வந்தார். எனவே அதை தடுக்க சிறார்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.

தற்போது 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடைசெய்யும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டத்திற்கு பிரான்ஸ் ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம், இத்தகைய சட்டத்தை இயற்றிய முதல் ஐரோப்பிய ஒன்றிய நாடு என்ற பெருமையை அது பெற்றுள்ளது.

அதிபர் இமானுவேல் மேக்ரானின் ஆதரவுடன் கொண்டுவரப்பட்ட இந்த நடவடிக்கை, குழந்தைகளைத் தீங்கு விளைவிக்கும் இணைய உள்ளடக்கங்கள் மற்றும் மனநல அபாயங்களிலிருந்து பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தச் சட்டத்திற்குப் பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்புகளிடமிருந்து வலுவான ஆதரவு கிடைத்துள்ளது.

பிற நாடுகளில்...


ஆஸ்திரேலியா மற்றும் ஆசிய நாடான மலேஷியாவில், 16 வயதுக்கு உட்பட்டோர், சமூக ஊடகங்கள் பயன்படுத்த, முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடான டென்மார்க்கில் இந்த தடை அறிவிக்கப்பட்டுள்ளது; ஆனால் இன்னும் அமலுக்கு வரவில்லை. நார்வே, சீனா, ஸ்பெயின், இத்தாலி, கிரீஸ், ஜெர்மனி போன்ற நாடுகளில் தடை விதிப்பது பரிசீலனையில் உள்ளது.

Advertisement