100 நாள் பணி வழங்க பி.டி.ஓ.,விடம் மனு

எலச்சிபாளையம்:எலச்சிபாளையத்தில், விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில், 100 நாள் பணி அட்டை வைத்திருக்கும் நபர்களுக்கு பணிவழங்கக்கோரி, வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
நுாறு நாள் பணி அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் பணிவழங்க வலியுறுத்தி, தமிழகம் முழுவதும், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில், கடந்த, 20 முதல் வரும், 30 வரை, அந்தந்த பகுதி வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகங்களில் மனு அளிக்கும் போராட்டம் நடந்து வருகிறது.
அதன்படி நேற்று, மாவட்ட செயலாளர் ஜெயராமன் தலைமையில், எலச்சிபாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர் பாலவிநாயத்திடம் மனு அளிக்கப்பட்டது.

Advertisement