அரசு ஊழியர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

நாமக்கல்:தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், 'நீட்' முறைகேட்டை கண்டித்து, நாமக்கல்லில் ஆர்பாட்டம் நடந்தது.
நாமக்கல் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமை வகித்தார். அதில், கல்வித்துறையின் சீரழிவுக்கு பொறுப்பேற்க மறுப்பதாக, பா.ஜ., அரசை கண்டித்தும், சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் போராட்டத்தை ஆதரித்தும், மாணவ, மாணவிகளின் மருத்துவ கல்வி கனவை தகர்க்கும், 'நீட்' தேர்வை ரத்து செய்ய வேண்டும்.
கல்வி துறையின் சீரழிவுக்கு மத்திய அரசே பொறுப்பேற்க வேண்டும் என, வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பப்பட்டது. மாவட்ட பொருளாளர் தியாகராஜன், துப்புரவு ஆய்வாளர் செல்வகுமார் உள்ளிட்ட அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Advertisement