347 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி அமைச்சர் விஜயலட்சுமி வழங்கல்

பள்ளிப்பாளையம்:பள்ளிப்பாளையம், சந்தைப்பேட்டையில் நடந்த விழாவில், 347 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை, பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி வழங்கினார்.

----நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் அருகே சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, நேற்று காலை கலெக்டர் மதுபாலன்- தலைமையில் நடந்தது.
பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி, 347 பயனாளிகளுக்கு, 1.73 கோடி ரூபாயில் நலத்திட்ட உதவி வழங்கினார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், ''குமாரபாளையம் சட்டசபை தொகுதியில், ஏற்கனவே, 833 பயனாளி
களுக்கு, 3.99 கோடி ரூபாய் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அதை தொடர்ந்து, இன்றைய தினம்(நேற்று), 347 பயனாளிகளுக்கு, 1.73 கோடி ரூபாய் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது,'' என்றார்.
இதையடுத்து, ஆவத்திபாளையம், காமராஜ் நகரில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.
ஆலாம்பாளையம் டவுன் பஞ்., காவிரி ஆர்.எஸ்., அரசு உயர்நிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டடம், அன்னை சத்யா நகரில் புதிய அங்கன்வாடி மையம், பள்ளிப்பாளையம் அக்ரஹாரம் பூலக்காட்டூரில் அங்கன்வாடி மையம், பாப்பம்பாளையத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, வெப்படை சக்தி நகரில் நீர்த்தேக்க தொட்டி ஆகிய முடிவுற்ற பணிகளை, மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து
வைத்தார்.
திருச்செங்கோடு ஆர்.டி.ஓ., லெனின், குமாரபாளையம் தாசில்தார் பிரகாஷ் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள், அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Advertisement